பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5259 திறந்திலே விழித்திலே அருளும் செய்கிலை இறந்தனேயோ என இரங்கி ஏங்கினர். தரங்கர்ே வேலையில் தடித்து வீழ்ந்தென உாங்கிளர் மதுகையான் உருவின் உற்றனள் மரங்களும் மலைகளும் உருக வாய் திறந்து இரங்கினள் மயன்மகள் இனைய பன்னிள்ை. 10] இலங்கை வேந்தனுடைய தேவியர்கள் உள்ளம் கலங்கி பிர்பதைத்து நெடிய துயரோடு கூவியழுத வந்துள்ள கிலைகளை இந்தப் பாசுரங்களில் கண்டு பரிந்து வருந்த கிருேம். பல தேசங் களிலும் பல சாதிகளிலும் இருந்த சிறந்த அழகிகளை இராவ னன் விழைந்து மணந்திருந்தான் ஆதலால் அத்கேவியர் யாவ ரும் நாயகன் மாண்டான் என்பதை அறிந்ததும் கூவிப் புலம்பிக் குலே துடித்த அழுது வந்துள்ளனர். எவ்வழியும் சுகபோகங் களையே நுகர்ந்து யாதொரு துயர மும் அறியாதிருந்தவர் கொடிய அல்லல்கள் அடைந்தநெடிய திகிலோடுகிலைகுலைந்து கொங்தனர். நூபுரம் புலம்பிடச் சிலம்பு கொங்து அழ. அவலத் துயரோடு வெளியேறி அமர்க்களத்தை நோக்கிக் கதறிக் கொண்டு மாதர் கடிது வந்துள்ள துன்பக் காட்சியைக் கவி இங்கனம் சுவையா வரைந்து தெளிவாக்காட்டியிருக்கிருச். இதுவரை அவரை வெளியே பர்ரும் கண்டதில்லை. கதிரவன் கதிரும் கானக் காமரு கோதை மாதர் எனச் சேமமா இருக்க வங்கவர் பெருக் துயருழந்து வருந்தி எழுந்து சமர பூமியை காடி விரைந்து வந்துள்ளார். அவ்வாறு பரிந்து வருங்கால் அவருடைய கால்களில் அணிந்திருக்க அணிகளும் கூடவே ஒலமிடலாயின. நூபுரம்= பாதசாம். சிலம்பு= காலில் அணியும் தண்டை. முன்னது நவமணிகளின் சலங்கைகள் பல அமைந்தது; கடக்கும்போது ஒலிக்கும் ஆதலால் பாதகிண்கிணி என்பர். இதன் மீதே சிலம்பினை அணிவர். பாகத்தின் முதலில் இருப்பது ஆதலால் அது தலைமையான நிலையில் முன்னுற வக்தச. நூபுரம் புலம்ப, சிலம்பு அழ என்றது கிலேமைகளை கேரே தெரிய நேர்ந்தது. மாதர் புலம்பி அழுகதைக் கண்டு காலணி களும் கலுழ்ந்து அழுதன. அந்த அழகிகளோடு நெடுங்காலம்