பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5306 கம்பன் கலை நிலை பொலிந்திருந்த புண்ணியவதி தயா இருள் சூழ்ந்து படரச் சில காலம் மயர்வாப் மயங்கியிருந்தாள்; நாயகனுடைய வெற்றி கிலையை அனுமான் வந்து கூறவே உற்றிருந்த துயரங்கள் எல். லால் ஒருங்கே ஒழிந்து இத்தாயவள் இன்பம் மீதார்த்து விளங்கி, ஞள். அந்த விளக்கத்தை இந்தவாறு விளக்கி யருளினர். - பத்துத் தலைகளையுடைய கொடிய ஒரு பாம்பு சீதையை ஆவலோடு கவ்வி வந்தது; அதனைக் கொன்று தொலைத்து இரா மன் அக்குலமகளை மீட்டியுள்ள நிலைமையையும் இது காட்டி யுள்ளது. மீட்சியின் காட்சி மதியுடன் டிாட்சியாப் கின்றது. அல்லலான துயரங்கள் யாவும் நீங்கின என்பதை அறிக்க, தும் உள்ளம் உவகையில் ஓங்கியது; இன்பம் எல்லை மீறினமை யால் உயிர் பரவசமாயது; ஆகவே வாப் கிறந்து பாதும் பேச முடியவில்லை; அனுமனே ஆர்வத்தோடு பார்த்தாள்; பேச முயன் ருள்; வாயிலிருந்து வார்த்தை யாதம் வெளியே வரவில்லை. 3ங்கனவிலாது கெடிது இருந்தாள். ஆனந்த அதிசயத்தால் சீதை கன்னே மறந்து இருந்த நிலை யை இது வரைந்து காட்டியுள்ளது. இன்பமோ துன்பமோ அளவு கடந்தபோது மனம் மயங்கி இயங்காமல் கின் அறுவிடும்; விடவே பேச்சு முதலிய யாவும் அடங்கி ஒடுங்கி கிற்கும் ళి: லால் அந்த நிலை இங்கே சிங்தை கூர்ந்து தெரிய வந்தது.) 1 கெடிது நேரம் மவுனமாயிருந்தவள் பின்பு எதோ தனக் குள்ளேயே பேசிள்ை. யாதொரு தொடர்பும் இல்லாமையால் அது பயித்திய காரி பிதற்றியதுபோல் இருந்தது. உம்மகளிப்பால் உரைகள் ஒளிப்பாயின. அக் களி நிலையைக் கருதி வியந்தாள். கனித்த இன்களி கள்ளினில் காட்டுமோ? பழுத்த இன்பக் களிப்பில் சானகி நிலைத்திருந்ததை இது குறித்துள்ளது. கள்ளை உண்டவன் களிமயக்கால் மொழி மயங் குவதுபோல் இக்கிளி மொழியும் மதிமயங்கியுள்ளாள்; அந்த, உண்மையை இந்த வாசகம் ஈண்டு இனிது விளக்கியுள்ளது.) பேரறிவும் பெருங்குணங்களும் ஒருங்கே நிறைந்தவள். பேரின்பப் பெருக்கால் ஒருரையும் ஆடாமல் இருந்தது உயர் வியப்பாய் கின்றது. மானச மருமங்கள் யாரும் எளிதே அறிய