பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5308 கம்பன் கலை நிலை உன்குலம் உன்னது ஆக்கி, உயர்புகழ்க்கு ஒருத்திஆய தன்குலம் தன்னது ஆக்கித் தன் னே இத் தன்மைசெய்தான் வன்குலம் கூற்றுக்கு ஈந்து அவ் வானவர்குலத்தை வாழ்வித் து என்குலம் எனக்குத் தந்தாள் என் இனிச்செய்வது எம்மோய்? --- 曙 ==ے .ேஎன முனனம *இராமபிரானிடம் அனுமான் கூறியபடியே ஈண்டு முடிந்துள்ளமை கூர்ந்து சிந்திக்கத்தக்கது. அந்த மேதை ைேகயை வரைந்து காட்டியுள்ள மொழிகளின் அழகுகளையும் பொருள்களின் சுவைகளையும் து ணு கி உணர்ந்து கொள்ள வேண்டும். அறிய அறிய இவ் வுத்தமியின் பான்மைகள் விளங்கி ஆன்ம இன்பம் மேன்மையாய்ப் பெருகி வருகிறதுஅல்லல் பலவும் பொறுத்து எவ்வழியும் கற்பைச் செவ்வை யாப்ப் பாதுகாத்து வந்த புனிதவதி ஆதலால் இக்குலமகளை உலகம் உவந்து வியந்து விழைந்து புகழ்ந்து போற்றுகிறது. This glorious Sita will always be purer than purity itself, all patience, and all suffering. She has gone into the very vitals of our race. (Vivekananda) எல்லாத் துன்பங்களையும் பொறுமையோடு சகித்து என்றும் பரம பரிசுத்தமாயிருந்துள்ள மேலான சீதை மனித குலத்துக்கு உயர்ந்த உயிர் நிலையமாய் ஒளிபுரிந்திருக்கிருள் என விவேகானக் தர் இவ்வாறு வைதேகியை வியக்து புகழ்ந்திருக்கிரு.ர். அனுமான் வினவியது. ஆனந்த நிலையில் அவசமாப் பாதும் பேசாமல் சானகி இருக்கவே அ அனு ம ா ன் திகைக்கான், கேரே வினவினன்: அம்மையே! எம்பெருமான் எ கிரியை முழுவதும் வென்று விசய கோதண் டத்தோடு விற்றிருக்கிருர்; அந்த வெற்றி கிலை யை இங்கு உரைக்கும்படி அடியேனே விடுத்தருளினர்; கங்களைச் சிறையிலிருந்து மீட்டி விரைவில் திருவயோக்திக்குப் போக விழைந்திருக்கிருர், அரிய மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டும் தாங்கள் பிரியமின்றிப் பேசாமல் இருப்பது எனக்கு வியப்பா யிருக்கிறது; ஒரு வேளை நான் சொல்வது பொய்யாயிருக்கும் என்ற ஐயமோ? என்ன காரணத்தால் இன்னவாறு மவுனமா யிருக்கிறீர்கள்? அடியேன் தெளிவாக அறிய விரும்புகிறேன்;

  • இந் நூல் பக்கம் 3847 வரி 20 பார்க்க