பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5322 கம்பன் கலை நிலை இல்லாத இங்கிறையுடையாள் முகத்துக்கு நேராகாமல் சாணி கின்றது. ஆதலால் மதிக்கு மா மறுத் தந்த முகத்தினுள் என்ருர். அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. (குறள், 1117) குறைந்த கலை கிறைந்து விளங்கும் மதிக்கு மறு உண்டு; இந்த மாதர் முகத்து அங்க மறு இல்லை என வந்துள்ள இது இங்கே சிந்திக்கத்தக்கது. மாசுபடியாக மதிபோல் முகம் கேசு மிகுந்து திவ்விய சவுந்தர சோதி வீசிச் செவ்வி சுரந்துள்ளது. எங்க மதியினும் தெளிக்க மதி அகத்தில் உள் ளது போல் முகத்திலும் அங்க ஒளி தெளிய வக்கது. ஞான ரேனை அனு மான் மதிக்கும் மறுத்தந்த மதியுடையவள் ஆதலால் வானமதிக் கும் மறுத் தந்தாள் என சானகி முகத்தின் எழிலைக் கவி இங்க னம் இனிது விளக்கி இருவகை நிலைகளையும் துலக்கியருளினர். தனக்கு இடர் இழைத்த கொடியவர்க்கும் இதமே கருதித் தண்ணளி புரிந்த புண்ணியவதி ஆதலால் இந்தப் பெண்ணரசி யின் பெருக்தகவும் பேரருளும் ஈண்டு நேரே தெரிய வந்தன. எவ்வுயிர்க்கும் இரங்கி இகம் புரிவது தெய்வ நீர்மையாம். அந்தக் கருணைப் பண்பு இந்தக் கற்பாசிபால் அம்புத நிலையில் அமைந்துள்ளது. அனுமான நோக்கி ஆரிய மொழியில் தேவி கூறியுள்ளதும் இங்கே காணவுரியது; அயலே வருவது காண்க. 'பாபாகாம் வா சுபாநாம் வா வதார்ஹாணும் ப்லவங்கம கார்யம் கருணம் ஆர்யேன 5 கச்சிங்காபராத்யதி. (வால்மீகம்) அதுமl தீயவர்கள் ஆலுைம் நல்லவர்களானலும் கொல்லத் கக்கவர்பால் கருணை புரிவதே பெரியோர் செயலாம்; குற்றம் அற்றவன் எவனும் இவ்வுலகில் இல்லை என மாருதிபால் சானகி இவ்வாறு குண நீர்மைகளைச் சீர்மையாக் கூறியிருக்கிருள்.) குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லே. குற்றங்களை ஆராய்ந்து பார்த்தால் சுற்றமாக யாரும் கிடையார் என ஒளவையார் இவ்வாறு கூறியிருக்கலால் பிழை பாடுகளின் நிலைகளைத் தெளிவாப் அறிந்து கொள்ளுகிருேம்.