பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5329 கருதிப் போற்றம் பெருமையை உரிமையாக உடையவள் என்பதை இங்கனம் உணர்த்தி யருளினுள். பெண்மை மரபின் பெருமேன்மைக்குப் பேரொளி புரிந்துள்ள பெருக்ககையளைப் பேரழகிகள் பேராவலோடு நேரே அழகு செய்ய நேர்ந்தனர். காணி=பரம்பரையாக வரம்பு செப்துவரும் உரிமை. சீதை எங்கள் இனத்தில் பிறந்து இசை திசை பரப்பிளுள் என உலக மாதர் எவரும் உவந்து புகழ்ந்து வரும் தலைமையை இப்பெண்ணரசி பெற்றுள்ளமை ஈண்டு உய்த்து உணரவுற்றது. ஆண்மைக் கெல்லாம் இராமன் காணி யாப் கிற்கின்ருன்; அவ்வாறே பெண்மைக் கெல்லாம் சீதை காணி யாய்ச் சிறந் உள்ளாள் இருபாலும் பெருமையுற இங்க இருவரும் மருவியுளர். உலகம் மூன்றின் இருதிறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர். (இராமா. சூர்ப்ப 61) இராமனேயும் சீதையையும் ஒருங்கே நோக்கிய சூர்ப்பநகை உள்ளம் உருகி உவந்து வியந்து இவ்வாறு புகழ்ந்திருக்கிருள். கற்பினுக்கு அணி. உண்மையான பெண்மைக்கு அணி கற்பு; அந்தக் கற்பி னக்கு அம்புத அணி சீதை என இது இனிது காட்டியுள்ளது. (கிறையால் தன் நெஞ்சை செறியே காத்து கிற்கும் அம்புத மிலே கம்பு என வந்தது. வெளியே நின்று பிறர் கற்பியாமல் தன் உள்ளமே சான்ருய்க் கற்று உறுதி பூண்டு கிம்கும் பெண் ணின் ஒழுக்கம் கற்பு என்னும் பெயரைப் பெற்று நின்றது அரிய பல நூல்களைக் கற்ருலும் உரிய கற்பு ஒன்று இல்லை ஆனல் அக்கப் பெண் ஊனமாய் ஈனம் அடைகின்ருள்; யாதும் கல்லாதிருக்காலும் உள்ளக் கற்பு ஒன்று உடையவள் எல்லாரா அம் எவ்வழியும் மகிமையாக் கொழுது துதிக்கப் படுகின்ருள். தினது கணவனைத் தவிர வேறு எவரையும் பிழையாக விழை யாக புனித கிலேமையே கற்பு என இனிது விளங்கியுள்ளது. இக்கப் புண்ணிய நீர்மையை யுடையவளே உண்மையான பெண்ணுப் பாண்டும் கண்ணியம் மிகப் பெற்றுள் ளாள். பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பு என்னும் திண்மையுண் டாகப் பெறின். 667