பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5833 உணவும் உண்ணுமல் உறுதியாய் விரதம் பூண்டு பொறுதியோடு கணவனைக் கருதி இருக்கமைக்கு இதுவும் ஒரு சான்ருயது. விமானம் ஏறியது. தவக்கோலங்களை நீக்கிச் செய்ய வுரியன செய்து ரோட்டி ஆடை அணிகள் புனேக்து யாவும் முடிக் கபின் உயர்ந்த விமானத் தில் சானகியை எழுந்தருளச் செய்தனர். சிறந்த தந்தத்தால் செய்து எங்கும் நல்ல முத்துக்களால் நிறைந்திருக்கமையால் அந்தச் சிவிகை சந்திர மண்டலம்போல் பொலிந்து விளங்கியது. அகன் இடையே அழகிய ஆகனத்தில் இப் பெண்ணரசி விற்றி ருந்தாள். பதினறு கருண மங்கையர் முன்னும் பின்னும் அத னைத் தாங்கி கின்றனர். வீடணன் முன்னே சென்ருன்; செல்ல வே எல்லாரும் ஒல்லையில் நடந்தனர். மானவிரணுப் மறுகிகின்ற தனது ஆண்டவனேச் சானகி ராமன் ஆக் கான சேர்ந்ததை கினைந்து கினைந்து கெஞ்சம் களித்துப் பேரானக்கத்தால் பெருகி கின்ற அனுமான் பேரன்புடன் பின்னே தொடர்ந்து வந்தான். கூட்டம் திரண்டது. அழகிய அக்க அசோகவனத்தை விட்டுச் சிவிகை வெளி யே வந்ததும் இலங்கை நகரில் இருந்த மங்கையர் அனைவரும் மகிழ்ச்சி மீதார்த்து திரண்டுவந்து கான்குபுறங்களிலும் சூழ்ந்து கொண்டு பல்லாண்டுகள் பாடிப் பரவசமாய் ஆடித் தொடர்ந் தனர். தேவ மாகரும் ஆவலோடு கூடி இராமநாதன் மனைவி யின் நாமங்களேத் துதித்துச் சேமமாய் அடர்ந்து நடந்தனர். பெண்ணரசி வாழ்க, கற்புக் தெய்வம் வாழ்க, சானகிகேவி வாழ்க, சீதாப்பிராட்டி வாழ்க வைதேகி வாழ்க என எவ்வழி யும் செவ்வையான வாழ்த்து ஒலிகள் சீரோடு நீண்டு எழுந்தன. பரிதாப நிலையில் பிரிவில் மறுகியிருந்தவள் உரிய நாயகனைக் கான நேர்ந்தாள் என்று தெரிந்த தும் அந்தக் காட்சியைக் கண்டு மகிழ விழைந்த மங்கையர் திரள்கள் எங்கனும் பொங்கி நெருங்கின. உள்ளே உவகை ஓங்க வெளியே விரைந்தனர். இப்புறத்து இமையவர் முனிவர் ஏழையர் துப்புறச் சிவந்தவாய் விஞ்சைத் தோகையர் முப்புறத்து உலகினும் எண்ணின் முற்றிைேர் ஒப்புறக் குவிந்தனர் ஒகை கூறுவார். (1)