பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5344 கம்பன் கலை நிலை இக்குலமகளைக் கூறும்போதெல்லாம் கற்பையே தலைமை யாக் குறித்து வருதலால் இவளால் அது அடைந்துள்ள கிலைமை யைத் தெளிந்து கொள்ளுகிருேம். உலக மங்கையர்க்குத் திலக மாப் ஒளி செய்துள்ளமையால் பெண்மைக்கு இவள் உண்மை ДL/MT&T காப்பாயினுள்)அந்த மரபு மகிமையுற வந்தவள் என்க. பொன் மணிகளால் அமைந்த அணிகள் மகளிர்க்கு அழகு செய்கின்றன; ஆயினும் சீதைக்கு அவை அவ்வாறு செய்வ தில்லை; அவளே மருவியுள்ள அளவே அவை பெருமை பெறு கின்றன; ஆதலால் பொற்பினுக்கு அழகினை என்று அந்த அம்புக நிலையை இங்கே விளக்கி யருளினர். பொம்பு= அழகு, அலங் காரம். விழுமிய எழில் சலம் விழி தெரிய வந்தது. இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே - மழைபொரு கண்ணிணே மடங்தை மாரொடும் பழகிய எனினும் இப்பாவை தோன்றலால் அழகெனும் அவையும்ஒர் அழகு பெற்றவே. (இராமா, மிதிலே 54) இக்க அழகு மொழிகளால் பிராட்டியின் அழகைக் கவி சுவையாய் முன்னம் குறித்தருளினர். அங்கக் குறிப்பை இடங் கள்தோறும் வலியுறுத்தி வருகிருர் (பூணுக்கு அழகு அளிக்கும் பொற்பினுள் என்ற தல்ை அம்புக சவுக்கரியம் அறிய வந்தது.) இந்தப் பேரழகியை அந்தப் போாழகன் கேரே நோக்கி ன்ை. நெஞ்சம் களித்தான். அற்பினத் தலைவன் என இராமனை இங்கே குறித்தது தலைமையான அன்பைத் தன் கலைவி.பால் வைத்திருக்கும் தலைவன் என்னும் நிலைமையைத் தெளிவாய்த் தெரிய. அற்பு= அன்பு. உழுவலன்பு உவகையில் பொங்கியது. தற் பிரிந்து அருள்புரி தருமம். தன்னைப் பிரிந்துபோய்த் தன்பால் மீண்டு வந்த மனைவியை ஈண்டு இவ்வாறு இக்கோமகன் அறிய நேர்ந்தான். உலகில் நேர்ந்துள்ள அல்லல்களை நீக்கவே அரசைத் துறந்து இராமன் அடவிக்கு வந்தான். தனது கணவனுடைய காரிய பூர்த்திக்குச் சிரிய துணையாய் உடன் தொடர்ந்து வந்த சீதை இடையே பிரிந்தாள்; இன்னல் பல படித்தாள்; இன்னவாறு அல்லல்கள் அடைந்தாலும் யாண்டும் பொறுமையாய் அருண்யே பேணி