பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5357 யான் இருந்து பெற்ற பேறு இற்றது போலும்! பத்து மாதம் சிறையிலிருந்து படுதுயர் உழந்தேன்; எப்படி யும் எனது நாயகனைக் காணலாம் என்னும் ஆசையினலேயே ஆவி யாக்கையில் இருந்து வந்தது; இன்று காணலாம்; சாளைக் காணலாம் என்று நாளும் நாளும் எங்கி வந்தேன்; கணமும் ஊழியாக் கழித்துபோக முடிவில் வந்து கணவனைக் கண்டேன்; கண்டதும் கான் கேட்ட மொழிகள் செவிகளை எரித்து உள்ளத் தை வேகச் செய்தன; உயிர் வெந்து சாகின்றது; முன்னமே செத்து ஒழியாமல் உரியவனே அடையலாம் என்று பிரியமா உயிரைப் பாதுகாத்து வைத்திருக்க நான் பெற்ற பலன் இது! என்று உற்ற துயரோடு உயிர் வேதனையாப் உரைத்திருக்கிருள். பேறு என்பது அருமையாப் பெறத்தக்க பெரிய பாக்கியங்களைக் குறித்து வரும்; அது இங்கே இகழ்ச்சிக் குறிப்பில் வந்தது. இற்றது என்றது. இது என்னும் சுட்டோடு இறுதியாய் அழிந்தது என்னும் பொருளையும் குறித்த கின்றது. தான் பெற்ற பேறு இன்னது என இன்னலோடு இசைத்துள்ளாள். தசை உண்டாய், நறவு அருந்தினப் இழி பிறவினள் என முன்னம் அவன் வைது பழித்த வசைகளை எல்லாம் ஒருங்கே திரட்டி யான் பெற்ற பேறு இற்றது போலும்! என எங்கித் தவித்துள் ளாள். உள்ளம் கொதித்து உயிர் பதைத்து உரைத்துள்ள இவ் வாசகத்தில் பெண்மை பேசும் உண்மை வாசம் ஓங்கி ஒளி விசி யுள்ளது. புனித மங்கை புலத்து புலம்புவதில் இயல்பு தெரிந்தது. ( இருந்து என்றது கொடிய துயரங்களை அடைந்து நெடிய பரிதாபங்களோடு உரியவனேயே கருதி உளம் உருகி உயிர் மறுகி யிருந்த அந்த இருப்பைச் சிங்தை செய்து குறித்தாள்.)அவ்வாறு நம்பி இருந்தது பெரிய பிழை; அன்றே இறந்து போயிருக்க வேண்டும் என்று இரங்கி யிருக்கிருள். உயிர் வாழ்ந்திருந்தது உயர்த்த பேறுகளை அடையலாம் என்று கருதியே; அந்தக் கருத்து விருத்தமாய் விபரீதமுற்றது என உளம் வெதும்பினள். (கணவனையே கருதி உருகியிருந்த தனது நிலைமையையும் ர்ேமையையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள யான் என்ருள்.)பிரான ாாயகனை அடைந்து பேரின் பங்களைப் பெறலாம் என்.று பேரா சையோடு பெருகி இருந்த பேதை எனச் சீதை சிங்தை சொந்து