பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 7. இ ரா ம ன் 5359 கான் ஒரு பதிவிரதை என்று உலகம் யாவும் என்னை உவக்க புகழ்ந்து வருகின்றன; கானும் சித்த சுத்தியாய் உத்தம பத்தினி என்றே உறுதி பூண்டுள்ளேன்; ஆயினும் என்னை உரிமையாக் கொண்ட உத்தமன் உள்ளம் ஒப்பவில்லையே! எப்படி நான் நல்லவளாய் இருக்கமுடியும்? அக்கோ என் வாழ்வு இப்படியா முடிய வேண்டும் என்று நெடிய துயரோடு நெஞ்சம் கொதிக் தாள். உள்ளம் கொதித்துத் துடித்தாலும் உண்மையை வடித்து வலியுறுத்தினுள். பதிபால் பதிந்த பத்தி பத்தினி என வந்தது. என் கற்பு நிலையை நான் நன்கு அறிவேன்; என்னைப் படைத்த பிரமனும் என் உள்ளத்தை யாதும் பேதிக்கமுடியாது; தேவ தேவனும் தரும தேவதையும் எனது மன நிலையை நன்கு அறிவர்; இங்கு நான் இங்கனம் துணிக்த புகழ்ந்து கூறுவது விண் பெருமை ஆகாது; உண்மையை உறுதியாக வலியுறுத்த வே என் பெண்மையைப் பேசநேர்ந்தேன்; பிழையாதும் பேச மாட்டேன் என்று விரா வேசமாய் விருேடு விளம்பலானள். (பதுமத்தானுக்கும் பேர்க்கலாம் சிந்தையள் அல்லள் என்று இந்தக் குலமகள் ஈண்டு உள்ளம் துணிந்து உரைத்திருப்பது யாரும் ஊன்றி உணர்ந்து உண்மை நிலையை ஒர்ந்து கொள்ள வந்தது. உள்ளத் தாய்மையை மொழி தெளிவா வெளி செய்தது. எவ்வழியும் யாதும் நிலைகுலையாக செவ்விய திவ்விய அற்புதக் கற்பு சிதையிடம் தனியுரிமையாக இனிது அமைந்துள்ளது; அவ்வுண்மையை அகிலமும் அறியும் ஆயினும் உரியவன் உணர வில்லையே! என்று உள்ளம் பதைத்து உயிர் தடித்தாள். எல்லார்க்கும் இனிய கண்போல் உள்ள அழகிய கமலக் கண்ணன் .ெ க ச டி ய கடுங்கண்ணனப்த் தன்னைக் கடிக்க மொழிந்தது இந்தப் பெண்ணரசிக்கு நெடிய துயரமாப் நீண்டு கின்றது. நீரில் நெருப்புத்தோன்றியதுபோல்சீறிய துகலக்கியது. தலைமகனுடைய கிலேமை நீர்மைகளை எல்லாம் கினைந்து கினேந்து இனைந்து மறுகினள்: ‘'எனது நாயகன் அதிசய மேதை; எதையும் கூர்ந்து ஒர்ந்து உண்மை நிலைகளே எளிகே தெளிவா உணரவல்லவர்; என்னேடு இளமையிலிருந்தே பழகி உழுவலன் புடையராப் ஒழுகி வங்கவர்; எனக்கு இடர் செய்தான் என்று சினந்தே இலங்கைவேந்தனைக் குலத்தோடு அழித்து ஒழித்தவர்;