பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5362 கம்பன் கலை நிலை மங்கையர் நெஞ்சம் ஒரு கிலையில் கில்லாது என ஏமாங்கத காட்டு அரசி விசயையும் இவ்வாறு கூறியிருக்கிருள். பகைவர் உள்ளமும், பாம்பின் போக்கும், மின்னல் வேகமும் போல் மகளிர் மனநிலையும் என்று உவமைகளோடு உணர்த்தியுள்ளாள். உண்டியுள் காப்புண்டு உறுபொருள் காப்புண்டு கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு பெண்டிரைக் காப்பது இலம்என்று ஞாலத்துக் கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே. (வளையாபதி) கள்ளுற்ற கடந்தற் கனங்குழைநல் லார்கருத்தில் கொள்ளப் படும் எண் குணிக்கும் தகையதோ? தள்ளற்கு அரிதாகித் தம்மொடுபன் ட்ைபழகி உள்ளுற்ற தேவும் உணர்தற்கு அரிதன்ருே. (கந்தபுராணம், மார்க்கண்டேய 25) அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமும் கத்துபுனல் மீன்பதமும் கண்டாலும்-பித்தரே கானுர் தெரியல் கடவுளரும் காண்பரோ மாளுர் விழியார் மனம். (நீதிவெண்பா, 55) அத்தியின் மலரும் வெள்ளே யாக்கைகொள் காக்கை தானும் பித்தர்கம் மனமும் நீரில் பிறந்தமீன் பாதம் தானும் அத்தன்மால் பிரம தேவ'லைள விடப்பட் டாலும் சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லே கண்டீர். (விவேகசிந்தாமணி 34) கிறையால் மிகுகில்லா நேரிழை யாரைச் சிறையான் அகப்படுத்தல் ஆகா-அறையோ வருந்த வலிதினில் யாப்பினும் காய்வால் திருந்துதல் என்றுமே இல். (பழமொழி, 30) பெண்களைக் காவலால் கட்டுப்படுத்தி நிறுத்த முடியாது; அவரது மனநிலை யாரும் அறிய அரியது; உள்ளுமை தேவும் அதனை உணர இயலாது; அத்திப் பூவும் வெள்ளைக் காக்கையும் பித்தர் நிலையும் மீனின் சுவடும் ஒரு வேளை கண்டாலும காண லாம; மங்கையா மனகதைக கடவுளரும காண முடியாது; அது அதிசயமான நிலையினையுடையது என இவை சுவையாக்காட்டின. அத்தன், மால், பிரமன் என முக் தேவரும் இங்கும் வங் தள்ளனர். பெண்களுடைய சிக்கவிருத்தியை ஆண்கள் கிருத்த மா அறியமுடியாது என்பதை வலியுறுத்த இவ்வாறு இவர் கூற நேர்ந்தார். ஆடவர் மனத்தினும் அரிவையர் மனம் அறிய அரியது.