பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா மன் 5,455. வாயு வேகத்தினும் மனே வேகத்தினும் அதிவேகமாப் வானவிதியில் போகின்றவன் கங்கைக் கரையைக் கண்டதும் :குகா! ஆண்டவன் வருகிருர்” என்று ஆர்வத்தோடு கூவிச் சென்ருன். உவகை ஒலி மிகவும் வியப்பாப் மேலிருந்து வந்தது. குகற்கும் கூறி வான்வழி போனன் பரதனை காடி ஆவலோடு விரைந்த போகின்றவன் இடை யே குகனுக்கும் இராமனது வருகையை உணர்த்திப் போயுள் ளான். அந்த உண்மையை இது எண்மையாஉணர்த்தியுள்ளது. கங்கைக் கறையின் கலைவனப்ச் சிருங்கிபேரம் என்னும் ஊரில் வாழ்பவன்; இராமன் பால் பேரன்புடையவன்; இரவும் பகலும் அவனையே கருதி யுருகி ' என்று காண்பேன்? எப் பொழுது பார்ப்பேன்?' என்று எங்கி யுள்ளவன். பேரன்பு நிறைந்த இவனேக் குறித்து அனுமானுக்கு முதலில் யாதும் தெரி யாது. பின்புதான் அன்புரிமையோடு தெரிய சேர்க்க.த. 'குகைெடும் ஐவர்ஆனேம் முன்பு; பின் குன்று சூழ்வான் மகைெடும் அறுவர்ஆனேம்; கின்னெடும் எழுவர் ஆனேம்.' (விபீடணன், 146) என்று இராமன் விபீடணனை ே க் கி உரிமையோடு சொன்ன போதுதான் இவனது கிலேமை சீர்மைகளை விசாரித்து அனுமான் நன்கு தெரிந்து கொண்டான். தனது ஆண்டவன் பால் பேரன்புடையவன் என்று அறிக்கிருக்கமையால் வழி யிடையே அவனுக்கும் அறிவிக்கருளினுன் உம்மை எதிாது கழு வியனச்சமாப் உச்சநிலையில் ஒங்கி உரிமையை உணர்த்தியுள்ளது. உரிய கம்பிக்கு அண்ணன் வரவை உரிமையாக் கூறப் போகின்றவன் இடையே இந்த அரிய கம்பிக்கும் பிரியமா உரைத் துப் போனன். வினைமாட்சி விக்ககக் காட்சியாயுளது. கதி வேகமாப்ப் போகின்றவனது காரிய விவேகத்தையும் மதி யூகக்கையும் உணர்ந்து வியக் த ஈண்டு நாம் உவந்து நிற் கின்ருேம். வினைத்திட்பமும் மனத்திட்பமும் மதி துட்பமும் அதிசய நிலைகளில் துதிகொண்டு திகழ்கின்றன. எவ்வழியும் செவ்வையாப் யாவும் கவனிக் துச் செல் கிருன். யாண்டும் ஆண் டவன் கருமமே கருமமாய்க் கருதியுருகி உறுதி கூர்ந்த ஒர்ந்து புரிந்து வருகிருன். மதிநலம்.அதிசய வினையை ஆக்கியருளுகிறது.