பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5204 கம்பன் கலை நிலை கவை அனைத்தும் துறந்தவன் என இராமனை இங்கே இவ் வாறு கவி குறித்திருக்கிரு.ர். குறிப்பு சுவைசுரந்து வந்துள்ளது. ஈவை=குற்றம். பிழை இழிவுகளின் வகைகளை யெல்லாம் தொகையாகத் தொகுத்து அனைத்தும் என்ருர். (குற்றம் யாதும் இல்லாத குண கன பரிபூரணன் என்பது இங்கே தெரிய வந்தது. பழுது யாதும் படியாத விழுமிய நீர்மைகள் விளங்கின. ங்ம்குலக் குரவர்கள் நவையின் நீங்கினர்.

  • (இராமா, அயோ, மந்திர 19) தனது குல மரபின் நிலைமையைத் தசரதன் இவ்வாறு குறிக் திருக்கிருன். கவை யாதும் இல்லாத அந்தப் புனித மரபில் தனி ம்கிமையோடு இராமன் தோன்றியிருத்தலால் இந்தத் தோன்ற லின் குண நீர்மைகள் யாண்டும் உயர்தரமா ஒளிவிசி மிளிர் |கின்றன)இனிய பண்புகள் எவ்வழியும் இன்பம் தருகின்றன. - இக்குலமகனுடைய குனகலங்கள் அயலாரிடம் படித்துப் பழகிக் கொண்டன அல்ல; இயல்பாகவே மருவுக்கு மனம் போல் பிறவியிலேயே மருவிப் பெரிதாப் பெருகி வந்துள்ளன. உருவ அழகும் உள்ளப் பண்பும் உயர்குண நீர்மைகளும் எவ்வழியும்செவ்வையாப் இனிமை சுரந்த தனிமகிமை நிறைந்து இவ் வீர வள்ளலிடம் திவ்விய நிலைகளில் சிறந்து திகழ்கின்றன.

ராம: கமலபத்ராசடி: ஸர்வஸ் க்வ மகோஹர: ரூபதா கூதிண்ய லம்பக்க: ப்ரஸ் அகோ ஜகாத்மஜே. گیتی است. (வால்மீகி, சு. 35.8) சானகி இராமன் தாமரை இகழ்போன்ற அழகிய கண்கக்ள யுடையவன்; எல்லார் உள்ளங்களுக்கும் இனியவன்: உருவம் குணம் கருணை முதலிய நீர்மைகள் கிறைந்து சீர்மையாய்ப் பிறந்தவன் என இலங்கைச் சிறையிலிருந்த சீதையிடம் அனு மார் இவ்வாறு இராமனே இனிமையா வியந்து கூறியிருக்கிரு.ர். இராமனுடைய உருவ அழகைக் கண்டு யாவரும் மயங்கி மகிழ்கின்றனர்; குண நலங்களை நினைந்து எல்லாரும் வியந்து புகழ்கின்றனர். கண்ணையும் கருத்தையும் கவரும் கண்ணன் என இராமனை மாதவர் எண்ணியுள்ளது ஈண்டு நாம் எண்ணி யுணர வுரியது. விழுமிய அழகுகள் விழிகள் களிப்ப கின்றன.