பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5602 கம்பன் கலை நிலை நேரே காட்டியுள்ளது) விமானம் மேலே போகப் போகப் பார்வையும் ஆர்வமாய்க் கூடவே தொடர்ந்து போயிருக்கிறது. கண்கள் வெளியே நோக்கிக் காதல் மூண்டு போயினும் உள்ளம் அதனினும் நீண்டு முன்னே போயுள்ளது. அஷ் வுண்மை முனிமனம் தொடரப் போனன் என்ற தல்ை இனிது தெரிய வந்தது (உலக ஆசைகள் யாவும் ஒழிந்து பரமான்மாவை யே மனனம் செய்த வருதலால் முனிவர் என முத்தர்களுக்கு ஒரு பெயர் அமைந்தது. அத்தகைய கத்துவ தரிசியும் இராமனைத் தரிசித்துப் பிரிய முடியாமல் பிரியம் பெருகி உரிமை பூண்டுள்ள மையால் இவனது உண்மை கிலேமையை ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். ஞான யோகிகளின் புனித அறிவில் எழுகிற இனிய அமுதச் சுவை என மாயனக் கூறி வருவது இத்தாயனத் தொடர்ந்தவருகிறது. மாதவர்கரு தம்மாதவன்மானவனுயினன். \ மேலே படர்ந்து விரைந்த வந்த விமானம் இரண்டு கிமிடத் தில் பன்னிரண்டு மைல்களைக் கடந்து விட்டது; விடவே அங்கிருந்தபடியே அயோத்திமா நகரம் நேரே தெரிய நேர்ந்தது. தாவி வான் படர்ந்து மானம் தடையில து ஏகும் வேலைத் தீவிய கனியது ஆகிச் செருக்கிய காமச் செவ்வி ஒவியம் உயிர்பெற்று என்ன உம்பர்கோன் நகரும் ஒவ்வா மாவியல் அயோத்தி குழு.ம்மதில் புறம் தோன்றிற் றன்றே. (1 பொன்மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம் தோன்ற நன்மதிக் கிழவர் தம்மை நோக்கிய ஞான மூர்த்தி சொன்மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி கோன்றிற்று என்னலும் கரங்கள்கூப்பி எழுந்தனர் இறைஞ்சி கின்ருர், {2 வானவிதியில் மேலே மிகவும் உயர்ந்த விமானம் பறந்து வந்தமையால் வெகுதாரத்தில் இருங்கே திருவயோத்தி தெரிய வந்தது. தெரியவே இராமன் பிரியமாய் உரிய துணைவர்களே நோக்கி அதோ ! ஒளிகளை வீசி ஓங்கியுள்ளதே அதுதான் அயோத்தி ' என்று ஆர்வத்தோடு காட்டினன். பதின்ைகு'. ஆண்டுகள் முடிந்த நேரம்தான் தனது இராசதானியை இராமன் நேரே கண்டான். காணவே வீடணன் முதலிய துணைவர்களிடம் வேணவாவோடு கூறிஞன். கூறவே யாவரும் எழுந்து நின்.று அந்த நகரை நோக்கி உவகை மீதுளர்ச்து கொழு: புகழ்ந்தனர்.