பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5606 கம்பன் கலை நிலை அந்த உரைகளைக் கேட்டதும் இராமன் உள்ளம் களித்த உவகை மீதுளர்ந்தான். விமானம் வேகம் குறைந்து வானவிதியில் வட்ட மிட்டு நின்றது. கீழே கின்ற யாவரும் விமானத்தை விழைந்து நோக்கித் தொழுத கையாய்த் துதித்து ஆனந்தக் கூத்தாடினர். அந்தக் காட்சிகள் அன்பில் விளைந்த பேரின்ப ஒளிகளாப் யாண்டும் பெருகி நின்றன. களிப்பின் கலிப்புகள் கதித்தன. ஆர்ப்பு இராவணன் தென்நகர்ப் புறத்தளவும் சென்றது. எதிர் கொண்டு காணவந்திருந்த சனத்திரள்கள் வானவிதி யில் விமானத்தைக் கண்டதும் பெரு மகிழ்ச்சியால் பேரொலி செய்த ஆரவாரங்களின் கிலேயை இது சயமா விளக்கியுள்ளது. கங்கைக் கரையில் கின்று தேசமக்கள் ஆசையோடு முழக் கிய ஒசைகள் இலங்கை வரையும் சென்று தென்திசை னங் கனும் பரந்து கின்றன. மாண்டு மறைந்துபோன இராவணனை மீண்டும் கவி ஈண்டு இவ்வாறு ஞாபகப்படுத்தி யிருக்கிருர், தங்கள் ஆண்டவன் கென் திசையை வென்று .ெ வ ம் றி க் திருவோடு வந்துள்ளான்; அவனை வரவேற்க வந்த நாட்டு மக்கள் மிக்க மகிழ்ச்சியோடு ஆவலம் கொட்டி ஆர்த்து கின்ற னர்; அந்த மகிழ்ச்சி கிலையை இங்கனம் புகழ்ச்சியாப் போற்றி யுரைத்தார். உரைக் குறிப்புகள் நுனித்து உணர வந்தன. இராமனுடைய புகழ் திசைகள்தோறும் பரவியுள்ளது; ஆயினும் அவனுடைய இசை தென்திசை வென்றியிலிருந்தே நன்கு வளர்ந்துள்ளது. ஒசை பெற்று உயர்ந்துள்ள அவனது இசையைச் சனங்கள் விளைத்த ஓசை இலங்கை முதலிய எல்லா இடங்களுக்கும் மீண்டும் கீட்டி மேன்மை காட்டி கின்றது. சக்கரவர்த்தித் திருமகன் பால் தேசமக்கள் கொண்டுள்ள பாசமும் பரிவும் அவர் புரிந்த ஆரவாரமான ஒசைகளால் தெரிய வந்தன. உள்ளத்தில் பொங்கி எழுந்த உவகை உலகம் அறிய ஓங்கிப் பலவகை கிலைகளையும்நேரே உணர்ந்த கொள்ளவிரிந்தது. அந்த ஆனந்த ஆரவாரத்தின் இடையே ஆகாய விமான மும் நேரே வந்தது. வரவே பரதன் பெருமகிழ்வோடு உருகி கோக்கினன். உரிமையான உயிர்ப் பாசம் பெருகி நீண்டது.