பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5612 கம்பன் கலை நிலை யில் தன்னைக் கண்டு பழகியதிலிருந்து அனுமான் செய்தவருகிற அரிய தொண்டுகள் யாவும் இராமன் உள்ளத்தில் பெரிய பரிவு களை விளைத்திருக்கலை "ஈண்டு வெளியாயுள்ள மொழிகளால் தெளிவா உணர்ந்து கிலேமை நீர்மைகளை ஒர்ந்து கொள்கிருேம். அனுமனே இறுகப் புல்லின்ை. இனிய விருயமொழிகளால் நிலைமைகளே நயமாக் துலக்கி யருளிய அனுமனை இராமன் உழுவலன்புடன் கழுவியுள்ளான்; அவ்வுண்மையை இவ்வாசகம் விழி தெரிய விளக்கியுளது. இறுக என்ற தல்ை மார்போடு அழுந்தத் தழுவியிருக்கும் கெழு தகைமையை அறிந்து கொள்கின்ருேம். உரிமையும் உறவும் உள்ளப் பரிவும் உரைகளில் நேரே பெருகி வந்துள்ளன.) உனக்கும் எங்தைக்கும் தம்பிக்கும் யாய்க்கும் உரைப்பது என்? ஆர்வம் மீதுணர்ந்து கழுவிய கோமகன் பின்பு அன்பு கூர்க்க இவ்வாறு கூறியருளினன். அப்பனே! நீ எனக்குச் செய்க வருகிற உதவிகலங்கள் அளவிடலரியன; அவற்றிற்கு யாதொரு கைமாறும் செய்ய இயலாது. நன்றி பறிவோடு உபசா மொழி களும் நான் கூற விரும்பவில்லை. கன் பிள்ளைக்குத் தாயும் கங்கை யும் செய்துவருகிற ஆதரவுபோல நீ எனக்குச் செப்த வருகி ருப்! உனக்கு நான் உபசா மாப்ப் புகழ் மொழி கூற கேரின் அது பெரிய அபசாரமாம். எல்லையில்லாத உபகாரங்களை உன் னிடமிருந்து நான் பெற்றுள்ளேன்; என்னிடமிருக்க நீ பெற உரியது பாதும் இல்லை. உனது அரிய நீர்மை பெரிய சீர்மை யாப்ப் பெருகியுளது.” ETT GRAT உருகி உரையாடியுள்ளான். (தன்னுடைய தங்தை தாயர்கள் நிலையில் இந்த நம்பி அனு மானைச் சிங்தை செப்திருப்பது இங்கே தெரிய வந்தது. வெளி யே வந்த வாய்மொழிகள் அந்த உள்ளத்தின் பண்பையும் கண் பையும் பரிவையும் அரிய பெரிய மேன்மைகளையும் தெளிவ்ா விளக்கியுள்ளன. விழுமிய நீர்மைகள் விழி தெரிய வந்தன. உழுவலன்புடன் எவ்வழியும் செவ்வையாப் ஊ | ய ம் புரிந்து வருகிற உத்தம பத்தனை நோக்கி இக் கோமகன் கூறி யுள்ள உரைகள் உலகத் தலைவர்கள் எவரும் உணர்ந்து தெளிந்து