பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6614 கம்பன் கலை நிலை ஊடுயிர் உண்டென உலர்ந்த யாக்கையன் பாடுறு பெரும்புகழ்ப் பரதன் தோன்றின்ை. (1) அனுமன் காட்டியது. தோன்றிய பரதனைத் தொழுது தொல் அறச் சான்றென கின்றவன் இனேய தம்பியை வான்தொடர் பேரரசு ஆண்ட மன்னனே ஈன்றவள் பகைஞனேக் காண்டி ஈண்டென்ருன். (2) இராமன் கண்டது. காட்டினன் மாருதி கண்ணில் கண்ட அத் தோட்டலர் தெரியலான் கிலேமை சொல்லுங்கால் ஒட்டிய மானத்துள் உயிரின் தந்தையார் கூட்டுருக் கண்டன்ன தன்மை கூடின்ை. (5) இங்கே நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளை நேரே காண்கின்ருேம். நெஞசம் வியந்து நிலைமைகளைச் சிங்தித்து நீர்மை சீர்மைகளைக் கூர்மையா ஒர்ந்து ஆர்வமாக் தேர்ந்து தெளிந்து கொள்கிருேம். அண்ணனைக் காண வேண்டும் என்று வேனவாவுடன் எதிர்கொண்டு வந்து கங்கையின் வடகரையில் பரதன் கிற்கின் முன். தென் திசையையே அண்ணுக்து நோக்கி ஆவல் மீதார்க் துள்ளான். தொழுத கையும் அழுத கண்ணுமாப் உழுவலன் புடன் உருகி நிற்கின்ற அங்கிலை பரிதா பமாய்ப் பெருகி விளங்கி யது. பிரிவின் துயரால் மறுகியுள்ளமை நேரே தெரிய வந்தது. ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன். பரதனுடைய உருவநிலையை இது வரைந்து காட்டியுள்ளது. உடல் இடையே உயிர் ஒன்று, உண்டு என்று யூகமாய் அறிந்து கொள்ளும்படி அவன் சோகமா யிருந்துள்ளான். இளைத்து மெலிந்து எலும்பும் தோலுமாய்க் களைத்திருத்தலைக் கருத்தா உணர்ந்து வருத்தம் மிகுந்து மறுகி கிற்கின் ருேம். உணவின்றி உறக்கம் இன்றித் தமையனேயே கருதி யுருகி யிருந்தான். அரிய தவ கிலையில் இருந்த அந்த விரத சீலத்தை மெய் மெய்யா உணர்த்தி நிற்கிறது. அக் கிலேமை இங்கே தலை மையாத் தெரிய வந்தது. தேக மெலிவு சோக விளைவா கின்றது.