பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5639 அண்ணனும் அண்ணியும் வணங்கிய பின்னர் இலக்குவனும் அம்முறையே அடியில் விழுந்து தொழுது வணங்கினன். பெற்ற தாய் சுமித்திரை; பெரிய'தாப் கோசலே; உரிய காப் கைகேசி. அந்த மூன்று தாய் மாரும் ஆன்ற ஆவலோடு தழுவி எடுத்து உழுவலன்புடன் இந்த இளவலை நோக்கி உளம் உவக்க வாழ்த் தினர். ஆர்வ மொழிகள் சீர்மை தோப்க் த நேர்மையா வந்தன. மன்னவற்கு இளவல் நீயே வாழிஎன்று ஆசி சொன்னர். இலட்சுமணனை இவ்வாறு தாய்மார்கள் ஆர்வம் மீதுளர்ந்து வாழ்த்துரை கூறிப் போற்றியிருக்கின்ருர் அரசர் பெருமானப் அவனியை ஆள வந்துள்ளமையால் மன்னவன் என இராமனை இன்னவாறு மகிழ்ந்து மொழிக்க பின்னவனே வியந்து புகழ்ந்தார். மணிமுடி குடி அரியனை அமர்க்க இக் கோமகன் ஆட்சி புரியும் மாட்சியைக் காணும் காட்சி உள்ளத்தில் நீட்சியா புள் ளது; அவ்வுண்மையை உரைகள் வெளிப்படுத்தின. அக்க அருமை அண்ணனுக்கு உரிமையான தம்பி நீ ஒருவனே என வியந்து புகழ்ந்தனர்; “இராமன் பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரி யாமல் பின்சென்ற பெரியான்' எனப் ப: தன் உ ள் ள ம் உருகி இலக்குவனை உவக் து கூறியிருப்பது ஈண்டு உணர்ந்து கொள்ள வுரியது. இளவல் நீயே! என்ற கில் ஏகாரம் கனிமையான தலை மையை விளக்கி இளே .பெருமானின் நிலைமையைத் துலக்கியது. இராமனுக்கு ஊழியம் புரிக்ககால் ஊழியும் தேயாத புக G49_y _ఆక్రతులైత్రి_ుతGఆ9 ஆர்வமாய்ச் சென்ற த இத் தம்பிக்கு எண்ணரிய மகிமைகளை இனிது விளைத்துள்ளது. யாவரும் புகழ இசைகள் வளர்ந்தன. - o இன்னவாறு முன்னவனேயும் பின்னவனையும் கண்டு அன்னை யர் மகிழ்ந்து கிற்குங்கால் பரதன் பரிவோடு வந்து பாதகைகள் இரண்டையும் இராமன் பாகங்களில் நேரே வைத்து கெடிது விழுந்து தொழு து கண்ணிர் சொரித்து கரைந்து கிடந்தான். பரதன் பணிந்தது. சேவடி இரண்டும் அன்பின் அடியுறை யாகச் சேர்த்திப் பூவடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி