பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56.50 கம்பன் கலை நிலை எவ்வழியும் விழுமிய நிலையில் கெழுமி மகிமை தோப்க்சள்ளன. இந்த அரச குமாரர்களுடைய சகோதர வாஞ்சைகள் மனித சமுதாயங்களுக்கு இனிய புனித போதனைகளாயி, பொலிந்த அரிய பல பண்பாடுகளை அருளி வருகின்றன. உழுவலன்புடன் கொழுது வணங்கிய தம்பியர் இருவரை யும் தழுவி அணைத்தக் கெழுதகைமையுடன் நின்ற இராமன் தன்னேடு வந்துள்ள துணைவர்களை அங்கக் குரிசில்களுக்கு உரி மையோடு காட்டி உவகைகளை ஊட்டி யருளின்ை. பின் இணைக் குரிசில் தன் இனப் பெருங்கையால் வாங்கி வீங்கும் தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி அத் தம்பிமாருக்கு இன்னுயிர்த் துனே வர் தம்மைக் காட்டின்ை; இருவர்தாளும் மன்னுயிர்க்கு உவமைகூர வந்தவர் வணக்கம் செய்தார். தன் பால் அன்பால் எவ்வழியும் உதவிபுரிந்து வருகிற உரிமை யாளர்களைத் தனது அருமைத் கம்பியர் இருவருக்கும் அறிமுகம் செய்ய விரும்பி இராமன் ஆர்வமாத் தெரியப் படுத்தினன்; உடனே சுக்கிரீவன் விபீடணன் அங்கதன் முதலிய தலைவர்கள் எல்லாரும் இக்குமரர்களைத் தொழுது வணங்கினர். இன் உயிர்த் துணைவர். குகன் முதலிய உரிமையாளர்களை இவ்வாறு கூறியுள்ளார். யாண்டும் ஆதரவாப் உரிமை பூண்டு ஊழியம் புரிந்த வங்குள்ள மையால் ஈண்டு இங்கனம் அவர் உறவாப் சேர்ந்தனர். உடலின் தொடர்பாப் உடன் பிறவாதிருக்காலும் உயிர்க்கிழமையுடைய ராயப் எவ்வழியும் உதவி செய்து வந்தவர் ஆதலால் உயிர்த் துணை வர் என கின்ருர். ஆத்தும பங் த க்கள் என்பது இங்க வார்த்தை யால் தெரிய வந்தது. அரிய அன்புரிமை உரையில் மருவியுளது. குகன், குன்று சூழ்வான் மகன், அகமனமர் காதலுடைய வீடணன் ஆகிய மூவரும் கால்வரோடு சேர்ந்த எழு புதல்வர் கள் ஆைேம் என்.று முன்னரே இராமன் உரிமை கொண்டு உறுதி செய்துள்ள விழுமிய கிழமையும் ஈண்டு உணர வந்தது. இயல்பாகவே இனிது அமைக்க கன்னுயிர்த் துணைவர்க்கு அங்க இன்னுயிர்த் துணைவரைக் காட்டி யருளவே அக் காட்சி அவர்க்குப் பெருங்களிப்பை ஊட்டிப் பெருமையை நீட்டியது.