பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5703 வித்தக விளக்கமாப் வந்துள்ள இது இங்கு நன்கு உய்த்து உண ரத் தக்கது. ஒரு சக்கரவர்த்தித் திருமகன் மணி முடிசூடினன்; அதனைக் கண்டு தேச மக்கள் யாவரும் பெருமகிழ்ச்சி அடைக் தனர் என்று இயல்பாக் கூறியிருக்கலாம்; அவ்வாறு கூறவில்லை. இராமபிரான் தலையில் குடியுள்ள அரச கிரீடம் தன் தன் தலையில் குடியிருப்பதாகவே ஒவ்வொருவரும் கருதி உள்ளம் களித்துள்ளனர். அவ்வுண்மை இவ்வுரை யால் உணர வந்தது. தம் கண்ணினும் உயிரினும் அரிய இனிய பொருளாக இரா மனை யாவரும் எண்ணி வருகின்றனர்; அவனைக் கருதுக்தோறும் அன்பு சுரந்து பேரின்பம் பெருகி வருகின்றது; அக்கப் புண்ணிய மூர்த்தி இன்று அரச பதவிக்கு வங்ககைக் காணவே அதிசய ஆனந்தம் அடைந்தனர். உயிரின் பரவசமான அந்த அரிய பெரிய இன்ப கிலையைக் கவி இங்ங்னம் சுவையா விளக்கியருளினர். இராமன் சக்கரவர்த்தியாய் வந்தது எல்லாரும் சக்கரவர்த்தி களாய் கின்று நிலவச் செய்தது. அவனது தலைமையில் வாழ நேர்ந்தது பரமபத வாழ்வாகவே சூழ கேர்ந்தது. ஒருவர் இரு வர் இவ்வாறு கருதவில்லை; உலகிலுள்ள சிவகோடிகள் யாவுமே ஆவலோடு கருதி ஆனந்த பாவசங்களை அடைந்துள்ளன. இராமன் முடிகுட இசைக்கான் என்று முன்பு அறிந்த போது மாந்தர் யாவரும் மகிழ்ச்சி மீதுளர்க் து கின்றனர்; யாண் டும் புகழ்ச்சி மொழிகள் பொங்கி உணர்ச்சிகள் ஒங்கி வந்தன. பாவமும் அருங் துயரும் வேர் பறியும் என்பார்; பூவலயம் இன்று தனி அன்று; பொது என்பார்; தேவர்பகை யுள்ளன. இவ்வள்ளல் தெறும் என்பார்; ஏவல்செயும் மன்னர் தவம் யாவதுகொல் என்பார்; (அயோத்தி, கைகேசி சூழ், 98) அரசன் ஆக இராமன் அமைக்கான் என்று தெரிந்தபொழுது உலக மாந்தர் உவகை மிகுத் து இவ்வாறு உரை பாடியுள்ளனர். உரைகளில் மருவியுள்ள பொருள்க ைக் கருதியுணர வேண்டும். இராமன் தனித் தலைமைச் சக்கரவர்த்தியாய் அமர்ந்திருக் தாலும் எல்லாரும் மானம் மரியாதைகளோடு தனித் தனியே இனித்த போகங்களை எவ்வழியும் செவ்வையாப் அனுபவிக்க