பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5715 கதித்த வேதமந்திரங்களை முறைமுறையே ஓதி வாழ்த்தி உவந்து போயினர். இன்ப நிலைகளில் அன்புகள் பெருதி கின்றன. வேதியர் போனபின் வேந்தர்களை அழைத்தான். முடிமன்னர்கள் யாவரையும் பெரு மகிழ்வோடு நோக்கிப் பேரருள் புரிந்தான். அரிய யானைகள், பெரிய குதிரைகள், சிறக்க இரதங்கள், உயர்ந்த மாணிக்கக் கடகங்கள், இரத்தின கண்டி கைகள், முத்து மாலைகள், வீரக் கழல்கள், வெற்றி விருதுகள் முதலிய அம்புகப் பொருள்களே அவரவர்களுடைய மகிமை மாண்பு தகவு தன்மைகளுக்கு ஏற்ப மிகவும் வாரி வழங்கினன். இந்த வள்ளல் இனிது முகமலர்ந்து புனித மொழிகள் புகன்று அரிய அன்புரிமையோடு அள்ளி அளிக்கும் அருமைப் பண்புகளைக் கருதி யுனரும்தோறும் அரசர்களுடைய உள்ளங் களில் பேரின்ப வெள்ளங்கள் நேரே பொங்கி எழுந்தன. மணிமகுட மன்னர்கள் அணி அணியாய் அமர்க்க தங்கள் சக்கரவர்த்தியைப் பணிவோடு தொழுது கின்ற காட்சி அரச குலங்களின் விழுமிய மாட்சியாப் விளங்கி எழில் வீசி கின்றது. ஐம்பத்தாறு தேசங்களிலிருந்த வந்திருக்க அரசர்களுக்கு வரிசையோடு மரியா கைகள் செய்து அனுப்பிய பின் உரிமைக் கணவர்களுக்கு அருமையான பெரிய சன்மானங்கள் புரிந்தான். சுக்கிரீவன் அங்கதன் அனுமான் வீடணன் குகன் முதலிய அன்புரிமையாளர்க்கு அ தி ச ய வெகுமதிகளை அருளின்ை. ஆர்வம் கணித்து தந்த அந்தப் பரிசில்கள் சீர்மை சுரங் து சிறப்பு கள் கிறைந்திருந்தன. நம்பி அருளியன இன்ப நிலையினவாயின. சம்பான் தன்னே வென்று தயரதன் கின்ற காலத்து உம்பர்தம் பெருமான் ஈந்த ஒளிமணிக் கடகத்தோடும் கொம்புடை மலையும் தேரும் குரகதக் குழுவும் அாசும் அம்பரத்து அனந்தர் தேதான் அலரிகாதலனுக்கு சந்தான். அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும் அகிலம்எல்லாம் அங்கதன் என்னும் காமம் அழகுறத் திருத்து மாபோல் அங்கதன் கன்னல் தோளாற்கு அயன்கொடுத்ததனே ஈங்தான் அங்கதன் பெருமை மண்மேல் ஆரறிந்து அறைய கிம்பார்? (2)