பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5722 கம்பன் கலை நிலை கலைமைத் தெய்வம் ஆதலால் பாமறைக்கிழத்தி எனச் சரசுவதி தேவியை இவ்வாறு காம கியமமாக் குறித்தருளினர். தாமரைக் கிழத்தியாயிருந்தவள் சனகன் மகளாய் வந்துள் ளமையால் பழமையான அந்தக் கிழமையும் வளமையாய்த் கெரிய வந்தது. வெள்ளைக்கலையுடுத்தி வெள்ளைப் பணி பூண்டு வெள்ளைக் கமலத்தில் விற்றிருக்கும் வெண்திரு அளித்திருக்க வெண்முத்த மாலையை வித்தக விவேகிக்கு உத்தம அரசி உரிமை யாத் தந்தாள். செந்திரு தக்கது. சிங்தை மகிழ வந்தது. பூமலர்த் தவிசை நீத்துப் பொன்மதில் மிதிலைபூத்த தேமொழித்திரு. செந்தாமரை மலரில் அமர்ந்திருந்த இலட்சுமி தேவியே மிதி லாபுரியில் வந்து தோன்றியிருக்கிருள். பூத்த என்றது எங்கும் புகழ்மணம் பரப்பி யிருக்கும் மகிமை தெரிய. இப்பொழுது அயோத்தி அரசின் இராச கொலுவில் சக்கரவர்த்தி அருகே சக் கர வர்த்தினியாப் அமர்ந்திருப்பவள் எத்தகைய கிலேயினள்! என் பதை உய்த்து உணர இங்ஙனம்வித்தக விசயமாஉரைக்கருளினர். திருவை ஐயன் திருவருள் முகங்து நோக்க, அனுமானுக்கு இனிய ஒரு சன்மானம் செய்யும்படி தனது அருமை மனைவியை இராமன் உரிமையோடு பார்த்த பார்வையை இது வார்த்துக் காட்டியுள்ளது. இக் கோமகனது குறிப்பு நோக்கம் கூரிய சீரிய மேன்மைகளோடு குலாவி வருகிறது. கண் பார்வையால் கருத்துக்களை உணர்த்துவதும், அவற்றைநேரே கருதி உணர்வதும் சிறந்த அரச நீர்மைகளாய்ச் சீர்மைதோப்ந்து திகழ்கின்றன. அக்த அரிய மதிகலம் இனிது அறிய வக்கது. இந்தப் பெண்ணரசியை அக்கப் புண்ணிய வேங்கன் தண் ணளியோடு பார்த்திருக்கிருன். திருவருள் முகந்து நோக்க என்ற தல்ை, அந்தப் பெருமானுடைய அகம் முகம் கண் பார்வை கருணை கம்பீரம் கிழமை கேண்மை அழகு முதலிய விழுமிய கீர்மைகள் யாவும் வெளியே தெளிவாய் விளங்கி கிற்கின்றன. தன் தேவியை உரிமையோடு இங்கே இவ்விரன் நோக்கிய து தங்கள் ஆவிகண் எங்கும் பெருமையாக் காத்து வந்தவனுக்கு சன்றி கூறி ஏதேனும் ஒன்று தருகவெனக் கருதியேயாம். வேறு