பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5,733 கடமைகளைத் திருந்திய பண்போடு தெளிக்க செய்ய நீங்கள் பிரிந்து போவதால் உங்கள் பிரிவு அரிய ஒரு கருமமா மருவி மிளிர்கிறது’ என இன்னவா.) இக் கருமமூர்த்தி உணர்வுரை கள் கூறி உரியவர்களுக்கு விடை யருளினர். அரிய பொருள் மொழிகள் பெரிய அறிவொளிகளாப் அருள்சுரந்துவங் தள்ளன. (கருணையங் கடவுள். இராமபிரான ஈண்டு இவ்வாறு கவி குறித்திருக்கிருர், யாரும் எளிதே அறிய முடியாத அரிய பரமன் அருள் புரிந்து வந்த மனித உருவில் மருவியிருக்க குரங்குகளோடு உறவாடி கிரம்பிய நீர்மையில் அன்பு கனிந்து இன்பமொழிகளை இனிது கூறியுள்ளமையால் இங்கனம் பொருள் பொதிக்க பேரை இப் புனிதனுக்கு அருளினர். போருளுடைய பெருமாள் பாருள வந் தள்ளான். அளிபுரிந்த யாவும் காக்கும் கடவுள் இங்கே வையம் காக்க இவ்வழியில் வெளியே வந்து ஒளி விசி யுள்ளது. மனித வுருவில் மருவியுள்ள புனித தெய்வம் இனிது காண வந்தது. அங்கக் காட்சியில் மாட்சிகள் மிளிர்கின்றன. ) எனது அது காவற்கு இன்று என் ஏவலின் ஏகும். தன்னைப் பிரிந்து போகமுடியாமல் வருக்தி மறுகிகின்ற உரிமையாளரை நோக்கி இப் பெருமான் இவ்வாறு பேசியிருக் கிருன், சிருங்கி பேரத்திலும், கிட்கிங்கையிலும், இலங்கையி லும் எனக்கு வளமான நிலங்கள் இருக்கின்றன. விரிந்து பரங் துள்ள பெரிய இராச்சியங்கள் ஆதலால் அவற்றை நன்கு பாது காத்து எங்கும் இனிது பேண எனது தம்பிகள் ஆகிய நீங்கள் விரைந்து செல்ல வேண்டும். இங்கே உள்ள அரசாட்சியைக் கவனித்தற்கு மூன்று கம்பிகள் ஆன்ற கணைகளா அமர்ந்திருக் இன்றனர்; விேர் மூவிரும் அங்கே சென்று ஆகவேண்டியதை விவேகமாய்க் கவனியுங்கள் என்று குகன், சுக்கிரீவன், வீடணன் ஆகிய அம் மூவரையும் முகமலர்ந்து பார்த்து இக்கோமகன் இங்ங்னம் கூறியுள்ளான். உரைகள் ஊன்றி உணர வந்தன. . எனது காவல் அது என்றது உரிமையும் ஒருமையும் தெரிய தங்கள் கடமைகன உரிமையோடு கருதிச் செய்ய வேண்டும் -