பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5737 ஓங்கியுள்ளது. சூரியன் ஒளியில் பாரியல்கள் இயல்பா நிகழ்தல் போல் இக் கோமகன் ஆட்சியில் எல்லா மாட்சிகளும் எளிதே கிகழ்ந்துள்ளன. ஊரும் நாடும் உலகமும் உயர் பேரின் பகிலையில் ஒளி விசி கின்றன. எவ்வழியும் திவ்விய மகிமைகள் விளங்கின. வையகம் முழுதும் செங்கோல் மனுநெறி முறையில் செல்ல. இக்க ஐயனுடைய செங்கோல் ஆற்றியிருக்கும் அதிசய நீதிகளை இது கதிசெய்துள்ளது. ஆதவன் சோதி யாண்டும் பரவி ஒளி செய்தல்போல் இவனது நீதி எவ்வழியும் எளிதே பரவி ஒளிசெப்து உவகைகளை விளைத்து வந்தது. குற்றங்கள் நீங்கி யாவரிடமும் குண நலங்கள் ஓங்கி வர இக் குணசீலன் குறிக்கோளோடு செய்து வந்தான் ஆதலால் பாண்டும் எல்லா நன்மைகளும் இயல்பா நீண்டு வந்தன. உள்ளம். திருக்தில்ை உலகம் திருந்தும் என்ற மானச மருமத்தை இவ்வள்ளல் நன்கு அறிந்துள்ளமையால் அதனை எங்கும் இயற்றி யருளின்ை. திருக்கிய பண்புடைய பெருக்ககை எதிரே யாவும் திருக்க மாப் நேர்ந்தன. இயல்பான நியமங்கள் உயர்வா ஒளி புரிந்து ஓங்கின. அரசனுடைய அதிகார ஆற்றல்களை விட அவனது நெறி கீர்மைகள் பேராற்றலுடையன ஆதலால் அவை யாண்டும் நீண்ட நன்மைகளை நேரே ஆற்றிநெடிய கீர்த்திகளைஆக்கிவந்தன. மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி. என்ற பழமொழி இம் மன்னர்பிரானிடம் நன்னயமா ஒத்து கின்றது . எவ்வுயிரும் யாண்டும் இன்புற ஆண்டு வருவதே ஆட்சி என்பதை இவன் காட்சியாக் காட்டி வந்தான். மாந்தர் மகிழ்க் து வருவதையே இவ் வேந்தர் பெருமான் ஆழ்க்க ஆவ லோடு குழ்க் துவங்கான் ஆதலால் யாவரும் இவன் பால் பேரன்பு பூண்டு வந்தனர். ஆட்சி முறை அதிசய மாட்சியாயது. பிறர் முகமலர்ந்து வாழ்வதைக் காண்பதே இப் பெருமா னுக்குப் பேரின்பக் காட்சியாய் யாண்டும் பெருகி வந்தது. The most delicious pleasure is to cause that of other . people. (La Bruyere) 'பிறர் உவந்துவரப் புரிந்து வருவது உயர்ந்த இன்பமாய் 718