பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5739 பரிபாலனமான பாதுகாப்பு முறையில் பரம்பரையாகவே இந்த அரசகுடி உயர்ந்த வந்துள்ளது. முடிவில் காப்புக் கடவு ளே இராமனப் வந்து காக்க நேர்ந்துள்ளான். கையுமாறு இன்றிக் காத்தான் என்றது வையகத்தை எவ்வழியும் காணியாப் பேணி வங் தள்ளமை காண வந்தது. கருமம் சக்தியம் கருணை முகலிய இனிய நீர்மைகள் இப் புனிதனிடம் பெருகி வந்துள்ள மையால் மனித சமுதாயம் எங்கனும் அத் தேசத்தில் நல்ல திவ்விய குணங்கள் செவ்வையாப்ச் செழித்து விளங்கின. உம் பரும் இம்பரும் உலகம் ஈரேழும் இப் பெருமானே உவந்து புகழ்ந்து உரிமை கூர்ந்து பேரன்பு புரிந்து வந்தன. இக் குலமகனுடைய ஆட்சியில் உலக வுயிர்கள் யாண்டும் மாட்சி யாப் உவந்து வாழ்ந்து வந்துள்ளன. அவ்வுண்மைகளை உரை களும் செயல்களும் தெளிவா விளக்கி ஒளிசெய்து கிற்கின்றன. எம்பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி கின்று ஏவல் செய்ய. வேகோடிகள் யாவும் இப் புண்ணிய மூர்த்தியை எண்ணி ஏத்தி வந்துள்ளமையை இது கண்ணியமாக் காட்டியுள்ளது. பிள்ளைகள் பெற்ற தாயைக் கருதியதுபோல் உலக மக்கள் இராமனே ஆர்வத்தோடு போற்றி வந்தனர் என்று கூறவில்லை; பரம் பொருள் என்றே எண்ணிப் பய பத்தியோடு துதித்து வந்தனர் எனத் துதி கிலையை உணர்த்தியிருக்கிரு.ர். இராமநாத லுடைய உருவத்தை நேரே காணுதவரும் இவனது பேரை ஒரு புனித மந்திரமாக ஒதி இனிய அன்பு புரிந்து வந்துள்ளனர். சூரியன் ஒளிபோல் இக்கோமகனுடைய சீரிய புகழ் ஒளி யாண்டும் பரவி நீண்டு கிலவியுளது. இராம திவாகரன், இராமச் --க சந்திரன் என நாலோரும் மேலோரும் இச் சத்திய சிலனைப் போற்றி வருகின்றனர். கதிரவன் ஒளி பகலில் மாத்திரம் தெரிய வரும்; சந்திரன் ஒளி இரவில் மட்டும் இருளை நீக்கி மறைந்து போம்; இராமபிரானுடைய ஆணையும் ஆட்சியும் மாட்சியும் கீர்த்தியும் பகல் இரவு எப்பொழுதும் உலகம் எங்கனும் பரவி உயர் சோதியாய் ஒளிகள் வீசி எவ்வழியும் உலாவி யுள்ளன. பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இன்றும் இவ் வென்றி விானது விழுமிய பேர் எங்கும் சீரோடு பொங்கிப் பொலிக்கள்