பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5,742 கம்பன் கலை நிலை இராமபிரானது நிலைமை நீர்மைகளை இதில் தலைமையாக் காணுகிருேம். தருமமூர்த்தி என்று பலா ாலும் காவியத்தில் இவ் வா. இப்பெருமான் போற்றப் பெற்றுள்ளான் இக் கொற்றக் குரிசில் இன்று கோமுறை புரிய நேர்ந்துள்ளமையால் தரும தேவதை பெருமகிழ்ச்சி அடைய நேர்ந்த க. அறம் காக்க வந்த வன் அவனியைக் காத்து யாண்டும் அருள் புரிந்து வருகிருன். அம்பரத்து அனந்தர் நீங்கி 圍 அயோத்திவந்து அமர்ந்த அண்ணல், ஈண்டு அரசுமுடி குடி ஆட்சிபுரியும் மன்னர்பிரான இன்ன வா. நன்னயமா விளக்கி உண்மையைத் தலக்கி யிருக்கிருர், அம்பரம்= கடல் அது இங்கே பாற்கடலைக் குறிக்க கின்றது. அங்கே அரிகயில் அமர்ந்திருக்க திருமால் அதனை நீங்கி அயோத்தி நகரில் வந்த அரசர் பெருமானப் மணிமுடி குடி அரியணையில் அமர்ந்து அகிலமும் புரங் த அருள் புரிந்திருக்கிரு.ர். தன்னிகரில்லாத் தலைவன் ஆன தேவ தேவனே தனது காவியநாயகன் என்பதை இடங்கள் தோறும் கவி சுவையாக் குறித்து வந்தார்; ஈண்டு முடிவில் இவ்வாறு முடித்திருக்கிரு.ர். - பரமபதநாதன் அயோத்தி வேங்களுப் ஆட்சி புரிந்துள்ளான். அந்த மாட்சி காட்சிக்கு வந்தது. கடலில் உறங்கியிருக்க பெரு மாள் அவ்வுறக்கத்தைவிட்டு எழுந்த கிலத்தில் வந்து தங்கி விழிப்போடு வேலை செய்கிருர், அச் செயல் தெரிய கின்றது. பழைய காப்புக் கடவுள் புதிய காவலனுய் வங் த பூவலயத் தைக் காத்தருளுதலால் இந்தப் பாதுகாப்பால் சிவகோடிகள் யாவரும் பேரறிவுடையராய்ப் பேரின் பங்களை நுகர்த்து வந்த னர். சுகபோகங்கள் ய ர ண் டு ம் உயர் விவேகங்களோடு கோப்ந்து கரும நீதிகள் வாய்ந்த ஒளி மிகுந்து வந்தன. இராம காவியத்தின் பயன். அரிய பல இனிய நீர்மைகள் நிறைந்த இப்புனிதனது சீவிய சரித்திரம் மனித மரபுக்கு எவ்வழியும் செவ்வையா மதிகலங்களை அருளி வருகிறது உள்ளத்தைப் பண்படுத்தி உணர்வை ஒளி செப்த உயிரை உயர்த்தி வருதலால் இக் காவியம் சீவிய அமுக மாப்ச் சுவை சுரங்க சிறக்க திகழ்கிறது. கருதி உணர்வார்