பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6748 கம்பன் கலை நிலை அரசர் பலர் அங்கு வந்திருந்தனர். அசனும் சென்றிருந்தான். அப்பொழுது இவனுக்கு வயது இருபத்தேழு. அங்க மன்னர் குழுவில் இவன் மகிமையோடு விளங்கியிருந்தான். இளமை لنائي له லும் உருவ நலனும் பருவ வளமும் ஆண்மையும் இராச கம்பீர மும் இவனிடம் மேன்மையாய் அமைந்திருந்தமையால் யாவரும் இவனை வியந்து நோக்கி உவந்து கின்றனர். ரகு வம்சம் என்னும் வடமொழிக் காவியத்தில் இக்கச் சுயம் வரத்தின் கிலேமையையும், இவனது தலைமையையும் காளிதாசர் மிகவும் அழகாக விளக்கி யிருக்கிருர், எழிலும் வீரமும் மருவியிருக்கமையால் முருகப் பெருமான இவனுக்கு உவமை கூறியுள்ளார். உவமானங்களே நவமா இணைப்பதில் அந்த மகா கவிஞர் அதிசய சாதரியம் வாய்ந்தவர். ஒப்பனையில் கற்பனையில் ஒப்புயர் வில்லாக்கவிஞர்' என அவரது அம்புத கிலேயைக் கவிகள் உவந்து போற்றியுள் ளனர். அவர் இந்த இளவரசனை அழகா விளக்கி யிருக்கிருர், பூயிஷ்டம் ஆளி துப மேய காந்தி: மயூர பருவுகடாச்ரயினா குஹேக. (ரகுவம்சம், 6, 4) 'மயில்மீது அமர்ந்திருக்க குகன்போல் மிகுக்க எழிலோடு சிறந்த சிம்மாசனத்தில் அசன் அமர்ந்திருக்தான்' என இங் னம் குறிக்கிருத்தலால் இவனுடைய உருவம் பருவம் அழகு கம்பீரம் வீரம் முதலிய நிலைகளை நாம் உணர்ந்து கொள்கிருேம். வந்திருக்க வேங்கர் எவரையும் விரும்பாமல் இந்துமதி இச் சுக்கரனேயே தனது கணவகை உவத்து மணமாலே குட்டினுள். சூட்டவே அரசர் யாவரும் வாட்டம் அடைந்தனர். அவருள் மகத தேசத்து மன்னன் விரவாதம் கூறிப் போரை மூட்டின்ை: * அழகால் மாத்திரம் அரச குலத்தில் ஒருவன் மகிமை கான முடியாது; விரமே மேன்மைக்கு அறிகுறி; போரில் வென்ற விார்க்கே இக் கேரிழை உரிமையாம்” என்.ற அவன் மூட்டி விடவே போர் மூண்டது. இக்துமதி சிங்தை கலங்கிள்ை. அவ ளைத் தேற்றித் தங்தையிடம் இருக்கி விட்டு இவன் போரில் ஏறி ஞன். யாவரும் இவன் எதிரே யாதும் செய்ய முடியாமல்கோல் வியடைந்து தொலைத்தனர். அதன்பின் இவன் மனைவியோடு திருவயோத்தியை அடைந்தான். இவனுடைய பேரும் சீரும் பாரெங்கும் பரவி ஓங்கின. எல்லாரும் இவனை உயர்ந்த வில் விரன் என்.று வியந்து புகழ்ந்து உவந்து போற்றி வந்தனர்.