பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5828 கம்பன் கலை நிலை இறங்கியவுடனே இராமனேடு தானும் கூடவே தொடர்க்க போக்து ஊழியம் புரிந்து வருவேன்’ என்று குகன் உழுவலன் போடு கொழுது வேண்டினன். இவனுடைய பரிவும் பண்பும் இராமனை உருக்கி கின்றன. உள்ளம் உருகிய அவ்வீர வள்ளல் உரிமையோடு உரைகளாடினன், 'குகா! நீ அயலான் அல்லன்; வேறு ஒரு உருவில் மருவியுள்ள பாதனே, முன்பு நால்வர் பிறக் தோம்; உன்னேடு இன்று ஐவர் ஆயிைேம்; அங்கே உள்ள கிளைகளை அவன் பாதுகாத்து கிற்கிருன்; அதுபோல் இங்கே உள்ள என் கிளேகளை நீ ஆகரித்து வில்; உன் தங்தை ஏவியபடியே வனவாசம் செப்து நான் மீண்டு ஈண்டு வருவேன்; அப்பொழுது உன்னை அழைத்துக்கொண்டு அயோத்திக்குப் போவேன்; இப் பொழுது எனக்கு நீ விடை கொடுத்து அனுப்ப வேண்டும்” என்று இவ்வாறு அக் குலமகன் கூறவே இவன் உளம் மிக உருகி விழிர்ே சொரித்து சிறிது தாரம் உடன் நடந்தபோப் வழி யனுப்பி கின்ருன். உள்ளப் பாசம் வெள்ளமாய் விரிக்க வந்தது. பதினன்கு ஆண்டுகளும் இராமனேயே கருதி யுருகி எதிர் பார்த்திருந்தான். மீண்டு வந்த பின்பு அக் கோமகளுேடு அயோத்திக்கு வந்த அரசு முடிசூட்டு விழாவைக் கண்டு of மகிழ்க்தான். குகைெடும் ஐவர் ஆனேம் என்று இராமன் வாயால் கூறும் பாக்கியத்தைப் பெற்றுச் சீரும் சிறப்புமுற்றுச் சீர்மைநீர்மைகளோடு காவியத்துள் இவன் சிறந்துவிளங்குகிருன். ஆயிரம் அம்பிக்கு நாயகன். துனயகங்கைத் துமைவிடும் தொன்மையான். காயும் வில்லினன்; கல்திரள் கோளினன். கூற்றம் அஞ்சக் குமுறும் குரலின்ை. உள்ளம் துளயவன். தாயின் கல்லான். கங்கை நாவாய்க்கு இறை. எல்லே நீத்த அருத்தியன். இருகணிர் அருவி சோர இருக்கான். பணிமொழி கடவாதான். பருவால் இகவாதான். வன்பணே வில்லினன்.