பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5832 கம்பன் கலை நிலை துாய்மையன். வாய்மையன். மறுவிலன். மதியின் கூர்மையன். மந்திரத்து அறிஞன். இருங்கலை துணிந்த கேள்வியன். அருணன் செம்மல். மின் என விளங்கும் விரத் துண்டத்தன். பொன்னெடுங்குன்றம் வானின் வருவதேபோலும் மெய்யன். பத்திரச் சிறைகளே விரிக்கும் பண்பின்ை. கந்தரக் கைலேயை கிகர் க்கும் காட்சியான். புள்ளின் வேந்தன். விண்ணில் பொலிகின்றதோர் வெண்ணிற மேகம். இராவணன் வில்லைப் பல்லால் பறித்தான். தாளால் இறுத்தான். இன்ன உயிர்ப்பான் இருவரையும் நோக்கின்ை. ஏழுலகும் பெற்றனனே ஒத்தான். மூக்கினல் உச்சி முறைமுறையே மோக்கின்ருன். உரைத்திலன் உயிரும் தீர்ந்தான். பூதங்கள் விளியுங்ாளும் போக்கிலா உலகம் புக்கான். இந்தக் குறிப்பு மொழிகள் சடாயுவினுடைய பிறப்பு இருப்பு சிறப்பு செய்திறம் முதலிய கிலேகண் நேரே தெரிய நேர்க் துள்ளன. கன்னுடைய பெரிய தங்கை எனக் கருதி உருகி இராமபிரான் இக்கரும வீரனுக்குக் கருமம் செய்துள்ளமை யால் வைணவர்கள் பெரிய திருவடி என்று உரிமையோடு இப் பெரியவனைப் போற்றிப் புகழ்ந்து புனிதமா எக்தி வருகின்றனர். ச வ ரி . சவரி என்பவள் ஒரு தவமுது மகள். அரிய விரத கியமங் கள் உடையவள். மதங்க முனிவருடைய உபதேசங்களைக் கேட்டு உள்ளம் தெளிந்தவள். துறவற நிலையை மருவி ஞான லேங்கள் தோப்க் த ருசியமூக மலைச் சா லில் கனியே தவக்குடி சையில் அமர்ந்திருந்தாள். ஆன்ம கத் துவங்களைக்கெளிவாஅறிந்த யோக சித்தியில் உயர்ந்திருந்த இவள் இராமன் வனவாசமாய்