பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5836 கம்பன் கலை நிலை யறிக்கான். அறிந்ததும் சுக்கிரீவன விரைந்து அழைத்து வங்க சிநேகம் செய்து வைத்தான். அதன்பின் அந்த வானர வேந்தன் இக்க விர வேந்தனை அழைத்துக் கொண்டுபோய்த் கன் விட்டில் சிறந்த விருந்து புரிங் கான். விருக்கு அருந்தி உல்லாசமாப் அமர்க் திருக்கும்போது கவியரசனுடைய பரிதாப நிலையை இராமபிரா னிடம் அனுமான் அதிவிநயமாப் இனித கூறினன்: ' இராமநாதா! உங்கள் அருளை அடைந்துள்ள எங்கள் குலகாகன் பரிதாபகிலையில் மறுகியிருக்கிருர்; எ ல்லையில்லாத அல்லல்கள் உழங்க இல்லையும் இழந் தி ஈண்டு இங்கனம் ஒதுங்கியுள்ளார்; அண்ணனுன வாலி யால் இந்த அவலங்கள் விளைந்துள்ளன. அவன் அதிசய விரன்; அகிலமும் வெல்ல வல்லவன்; அவன் எதிரே காற்றும் ஓடாது; கதிரும் காயாது; யுேம் கீயாது; கடலும் அசையாது; கூற்றுவ உம் அஞ்சுவன். அவனுடைய பெயரைக் கேட்டால் இலங்கை வேந்தன் கலங்கி ஒடுங்குவான்; வாலி வால் சிறிது அசைந்தால் இராவணனுடைய கோலும் குடையும் அடியோடு அழிந்து ஒழிந்து போம் என வானும் வையமும் வியக் த புகழ அவன் உயர்ந்து வாழ்க் து வருகிருன், இவ்வாறு பேரும் ருேம் பெற்றுள்ள அத் தகைய அற்புத விரன் வெம்பி வெகுண்டு தம்பி என்றும் பததச மல் இவனே க் கொன்று தொலைக்க மூண்டு கொடுக்க யாங்கள் செப்த முடிவில் இவனுடைய மனைவியையும் பறித்துக்கொண்டு வெளியே விரட்டி விட்டான். பழிபோடு ஒ தங்கி அழி.கயருடன் இங்கே இவர் அலமக் கிருக்கிரு.ர். தொடர்க்கள்ள துயர இருள் எல்லாம் அடியோடு நீங்கி ஒழிய ஒரு விர சோதி ஈண்டு வில்லும் கையுமாய் எழுந்தருளியுள்ளது. துன்பம் யாவும் நீங்கி இனி மேல் நாங்கள் இன்பமாப் இனிது வாழ்த் து வருவோம்” என்று அனுமான் இவ்வாறு இனிய வினைய மாப்ச் சொல்லி முடித்தான். தம்பியின் மனைவியைத் தமையன் கவர்ந்து கொண்டான் என் மது இராமனுக்குக் .ெ க ச டி ப கோபத்தை மூட்டியது. மூட்டவே பாவரையும் விரைந்து அழைத்துக் கொண்டு கிட்கிங் காபுரிக்குப் போப் வாலியை வென்று விழ்த்திச் சுக்கிரீவனுக்கு அரசுமுடி குட்டியருளினன். அனுமானுடைய மதியூகமான சொல் இராமனை வசப்படுத்தி அதிசய விளைவுகளை ஆக்கியுளது. சொல்வலி அனுமன்வாய் சூழ்ந்த துாய்மொழி வெல்வலி வாலியை விரைந்து வீட்டிமேல்