பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5858 கம்பன் கலை நிலை புலைகிலேயில் இவன் பொங்கியிருந்தான். அத்திரி முனிவர் ஆச்சிர மத்தைக் கடந்த இராமன் கானகம் புகுந்தபோது இவன் வானகம் நடுங்க எதிரே வந்து தோன்றினன். யாகம் கூருமலே சீதையைக் கவர்ந்து கொண்டு வானவிதியில் இவன் விரைந்து போனன். போகவே அவ்விரர் இருவரும் ஒல்லையில் தொடர்ந்த அம்புகள் தொடுத்தார். உக்கிர வேகமா வந்த பகழிகள் பாய வே உடல் எங்கனும் உதிரங்கள் ஒழுகின. சீதையை அபலே விட்டு அடலோடு சீறி நேரே இராமலக்குவர் மேல் பாய்ந்து அந்த இருவரையும் வாரி எடுத்துக் கொண்டு வானில் விரைக் தான். விரையவே உடைவாள் கண் உருவி இவனுடைய தோள் ఆడిx வெட்டி விழ்த்தினர். தோள்கள் இழந்த இவன் தாள் களால் உதையுண்டு கீழே வந்து விழுந்தான். ஆழ்ந்த குழியில் விழ்ந்த இவன் உடலில் இருந்து ஒரு ஒளி மேலே போயது; உருவமாப் கின்ற அது அழகிய ஒரு கந்தருவனப் விளங்கியது. இராமனை உருகி நோக்கி அரிய துதிகள் பல கூறினன். தேவ வுருவில் கின்று இவன் கூறிய துதிமொழிகள் அதிசய ஞான ஒளிகளாப் வெளிவந்தன. இராமனுடைய திவ்விய நீர்மைகளும் அவதார மருமங்களும் அவ்வுரைகளில் தெளிவாய் விளங்கின. ஒப்பு இறையும் பெறலரிய ஒருவா! முன் உவந்துறையும் அப்புறையுள் துறந்து அடியேன் அருங் தவத்தால் அணுகுறலால் இப்பிறவிக் கடல்கடந்தேன்; இனிப்பிறவேன்; இருவினையும் துப்புறழும் நீர்த்த சுடர்த் திருவடியால் துடைத்தாய் .ே தான் அடைந்த இன்பப்பேற்றை இவ்வாறு வியந்து சொல்லி விட்டுத் தனக்கு சேர்ந்த சாபத்தையும் விளக்கிக் கூறினன்: 'ஆண்டவா! முன்பு நான் கந்தருவன்; தம்புரு என்பது என் பெயர். இசையில் மிகவும் இசைபெற்றிருந்தேன். குபோனது இராசதானி ஆகிய அளகாபுரியில் ஒரு திருவிழா கடந்தது. அரச சபையில் வந்த தெய்வ அரம்பை நடனம் ஆடினுள் ; அதனை நான் கண்டு மகிழ்ந்தேன்; பின்பு அவள் மேல் காதல் கொண் டேன்; எனது இசையையும் அழகையும் விழைந்து அவளும் இசைந்தாள்; இருவரும் கலந்து களித்தோம்; அவளது காம போகத்தில் நான் மூழ்கிக் கிடந்தேன்; என் களவு கிலையை அளகையர் கோன் அறிந்து உளம் மிகக் கொதித்து என்னைச் சபித்தான். நான் அரக்கனப் இழிந்து வீழ்ந்தேன்; நீண்டகால