பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5534 கம்பன் கலை நிலை -புண்ணியம் எனும் கின்உயிர் போயில்ை மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? கோசலை எண்ணியுள்ள எண்ணங்களை நம் கண் எதிரே இது காட்டியுள்ளது. புண்ணியமே ஒர் உருவமாப் மருவியுள் ளது எனப் பரதனைக் கருதியுள்ளாள்; அவ்வுண்மையை இவ் வுரையால் நுண்மையா நாம் உணர்ந்து கொள்ளுகிருேம்.) பாகன் மாண்டால் வையமும் வானமும் சிவகோடிகளும் வெப்ப துயரோடு மாப்ந்துபோம் என மறுகியிருக்கிருள். உயிர்களும் வாழுமோ? என்ற த அவை யாவும் யாகம் வாழா; எல்லாம ஒல்லையில் மாண்டே மடியும் என்பதை வலியுறுத்தியது. இன்று வந்திலனே எனின் நாளேயே வந்து ஒன்றும். தன்னிடம் முன்னம் அண்ணன் சொன்னபடி வரவில்லையே என்று துன்பமாய்த் துடித்துச் சாக நேர்ந்துள்ளான் ஆதலால் இன்னவாறு ஆறுதல் கூறிப் நன்னயமா பரதனைத் தேற்ற நேர்க் தாள். உன் தமையன் உறுதியாய் விரைவில் வந்த விடுவான் என்பாள் நாளையே வந்து ஒன்றும் என்ருள். ஒன்றுதல்= பொருந்துதல். நீங்கள் எல்லாரும் ஒல்லையில் ஒன்ருய்க் கூடி மகிழ்விர்கள்; வாடி வருக்காதே! மகனே! என்று இத் தாப் பரிந்த தேற்றி இருப்பது இங்கே தெரிந்து கொள்ள வங்கது. வனவாசம் போயுள்ள இராமன் இன்று வரவேண்டும் என்ற கணக்குப் பிழையாயிருக்கலாம்; அது சரியா இருந்தால் சத்திய சீலன் ஆன அவ்வுத்தமன் வந்தே இருப்பான்; அவன் வராமையால் காலக்கணக்குக்கான் தவறு; பொழுதை எண்ணி அறிவதில் பழுது சேர்ந்துள்ளத; ஆதலால் நாளைவரை பொறுத் திரு என்.று குறித்தருளினள். எப்படியாவது பிள்ளை உள்ளம் திருக்தி ஊருக்கு மீண்டு , வரவேண்டும் என்றே உருக்கமா வேண்டியுள்ளாள். மனம் தெளிய மதிமொழி வெளியாயது. ே ஒருவன் மாண்டால் உலகம் மாண்டுபோம் என்றகளுல் பரதன் பால் உலக உயிர்கள் கொண்டுள்ள அரிய பிரிய நிலைகள் தெரிய வந்தன. எல்லா உயிரினங்களும் இக்கல்லானை நயந்த நிற்பதை உணர்ந்து கொள்ள உரைத்தாள். உரிமைமொழி அருமை நிலைகளை இனிது விளக்கி ஆர்வ ஒளியாய் வந்த அ.