பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5540 கம்பன் கலை நிலை மைந்தன் என்னே மறுத்துரைத் தான் எனல்! எந்தை மெய்ம்மையும் இக்குலச் செய்கையும் நைந்து போக உயிர்கிலே நச்சிலேன்; முந்து செய்த சபதம் முடிப்பல்ை. (1) யானும் மெய்யினுக்கு இன்னுயிர் ஈந்துபோய் வானுள் எய்திய மன்னவன் மைந்தல்ை கானுள் எய்திய காகுத்தற் கேகடன் ஏனையோர்க்கு இது இழுக்கில் வழக்கன்ருேம் (2) தாய்சொற் கேட்டலும், தந்தைசொற் கேட்டலும், பாசத்து அன்பினேப் பற்றற நீக்கலும், ஈசற் கேகடன்; யானஃது இழைக்கிலேன்; மாசற் றேன் இது காட்டுவென் மாண்டென்ருன். (3) நேசத்தோடு தன்னைத் தடுத்து நிறுத்தித் தக்க புத்திமதி களைப் போதித்த கோசலைத் தாயை நோக்கிப் பரதன் இவ்வா.மு. பதில் கூறியிருக்கிருன். உள்ளக் கொதிப்புகள் உரைகளில் கடித்து நிலைகளை நேரே விளக்கி நிற்கின்றன.) பெரிய தாயிடம் பிரியமும் பணிவும் மரியாதையும் என்றும். பிரியாமல் இருந்து வந்தவன் இன்று இங்கே நெடிய அவலக் கவலைகளோடு இங்ங்னம்பரிந்து பதைத்து வருக்தி உரைத்த ளான். 'அம்மா! உன் மகன் உனது கட்டளையை மீறி வேறுபா டாப் மாறு கூறினன் என்று என்னைச் சீறி இகழாமல் திருவருள் புரிய வேண்டுகிறேன்; எனது கிலே மிகவும் பரிதாபம் உடையக: பதிலுை வருடங்களாப் போகா உயிரய்ைச் சாகாமல் இருக்த வந்துள்ளேன்; அண்ணல் அன்று கூறிய உறுதிமொழியை காளும் நாளும் எண்ணி எண்ணியே ஆவி உடலில் கண்ணி வந்தது; குறித்த காலம் கடந்தபின் ஒரு கணம் எனும் நான் உயிர்வாழ நேர்ந்தால் அது கொடிய பழி; செடிய பாவம். பழி பாவங்கள் எவ்வழியும் பாதும் படியாத விழுமிய குடியில்பிறந்த நான் வழுவாய் வாழலாகாத; என்னல் என் குலம் தாழ நேர்itt தது; மீளவும் தாழ்வுறச்செய்வது வெய்ய தீமையாம்; முன்னம் நான் சொன்ன ஆணையின்படி முடிந்து போவதே சிறந்த மேன் மையாம்; சத்தியத்தை நிலைநிறுத்துவதற்காகத் தனது அரிய உயிரைவிட்ட அந்த உத்தம வேங்தனுக்கு ஒரு புத்திர ஆப் நானும் பிறந்திருக்கிறேன். வாய்மை காத்து வானகம் போன அந்த