பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5550 கம்பன் கலை நிலை கும் செப்கை தெரிய பாண்டும் அதிசய வேலைகளைச் செய்து இராமனுக்கு ஆதரவு புரிந்து வந்த கைகள் ஈண்டும் உரிமையோடு ஊழியம் புரிந்துள்ளன. ’ ஊழியும் தேயாக புகழ் இவனிடம் உரிமையாப் ஒளி விசி எவ்வழியும் கேசு மிகுந்துள்ளது.) பஞ்ச பூதங்களும் அனுமானுக்கு அஞ்சி அடங்கி நடக் கின்றன. கடல்நீரைக் கடந்தான்; வானவிதியில் வாயு வேக மாய் வந்தான்; இலங்கையில் நெருப்பை வைத்து எரித்தான்; அயோத்தியில் வந்து அதனை அவித்து அணைத்து யாவருக்கும் பேருவகைகளை விளைத்தான். அஞ்சிலே ஒன்றின் அருமை மகன் ஆகலால் மற்ற நான்கும் பாங்கோடு இவனுக்கு உறவுரிமைகளா உதவி புரிந்து வருகின்றன. இயலுரிமை செயலில் விரிகிறது. எரிகரி அறி கரி என அமைய வைத்தவன் இளவலை உளம் உவந்து நோக்கி உறுதிமொழிகள் கூறினன். (மெய்யின் மெய் எனப் பரதனை இங்கே உரிமையாக் குறித்தது அவனது விரத கிலையையும் சரதநீர்மையையும் சித்தகத்தியையும் கருதியேயாம். சத்தியம் சக்தியமாய் கிலேத்து வர ப் பரதன் கித்திய கியமமா வாழ்ந்து வந்துள்ளான். அவ்வுண்மையை அனுமான் ஈண்டு ஒண்மையா விளக்கி யருளினன். இப்பொழுது தான் பாதனை இம் மதிமான் நேரே காணுகின்ருன்; இதற்கு முன் கண்ட தில்லை.ஆயினும் இக்குலமகனுடைய கிலேமைதலைமைர்ேமைகளைப் பல வகையிலும் கேட்டு வியந்து வந்துள்ளான் ஆதலால் இங்க னம் உவக் த புகழ்ந்தான். புகழ்ச்சி மொழி பொருள் பொதிந்து வந்தது. கிகழ்ச்சி கிலைகளை வலியுறுத்தி நெஞ்சைத் தேற்றினன். இன்னம் நாழிகை எண் ஐந்து உள. இராமன் அயோத்தி வச்து சேர வுரிய கால கிலையை இவ் வா.) தேற உரைத்தான். அண்ணன் குறித்த படி வரவில்லை; கூறிய தவணை கடந்த போகுமுன் இறந்து போக வேண்டும் என்ற தம்பி பரதன் விரைந்து மூண்டது நீண்டதவறு; செடிய பிழைனன்பதை இவ்வண்ணம் செவ்வையாத் தெளிவுறுத்தினன். 'ஏழிரண்டு ஆண்டில்வா!” என்று தந்தை சொன்னதாகக் கைகேசி முன்னம் ஆணையிட்டு அனுப்பினள் ஆதலால் அவ் வாறே கானகம் போன இராமன் மீண்டு ஈண்டு வர இன்னம்