பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 557]. Good - breeding is the blossom of good - sense. (Edward young) நல்ல அறிவின் நறுமலராய் நயமான சிலம் விளைந்துள்ளது என்னும் இது இங்கே அறியவுரியது. சிறந்த அறிவும் உயர்ந்த பண்பும் ஒருங்கே அமைந்தபோது கான் மனிதன்மேலான பெருங் தகையாளஞய் விளங்கி கிற்கின்ருன். அந்த நிலையிலுள்ள இந்த மதிமானிடம் இளையவன் கூறியவுடனே எல்லா வேலைகளும் ஒல்லையில் நடந்தன. நகரம் முழுவதும் அழகொளி திகழ அலங் காரங்களாயின. மங்கல தோரணங்கள் விதிகள் எங்கனும் விரிந்து விளங்கின. நகர மாந்தர் எல்லாரும் இராமபிரானைக் கான விழைந்து வேணவாவோடு விரைந்து கின்றனர். முரசுகள் முழங்கின. சக்கர வர்த்தித் திருமகனை மிக்க மரியாதைகளோடு எதிர் கொண்டு அழைக்கற்குக் கக்க ஆயத்தங்களுடன் யாவரும் புறப்பட வேண்டும் என்று பறைகள் அறைந்து துறைகள் தோறும் முறையே அறிவித்தனர். அந்த அறிவிப்பு ஒலிகளைக் இேட்டதும் எல்லாருடைய உள்ளங்களிலும் பேரின்ப வெள்ளங் கிள் பொங்கி ஆர்வம் மீதுளர்ந்த அன்புரிமைகள் ஒங்கி எழுந்தன. முரசொலி கேட்டலும் முழங்கு மாநகர் அரசரும் மாந்தரும் அந்த னளரும் கரைசெயல் அரியதோர் உவகை கைதரத் திரைசெறி கடல் என எழுந்து சென்றதால். (1) அனகனே எதிர்கொள்என்று அறைந்த பேரிநற் கனகம் நல்கூர்ந்தவன் கைப்பட் டென்னவும சனகனது ஊர்க்கென முன்னம் சாற்றிய வனேகடிப் பேரியும் ஒத்த வாமரோ. (2) அறுபதி யிைரம் அக்குரோணி என்று இறுதிசெய் சேனேயும் ஏனே வேந்தரும் செறிநகர் மாந்தரும் தெரிவை மார்களும் உறுபொருள் எதிர்ந்தென உவந்து போயிஞர். (3) அன்னேயர் மூவரும் அமரர் போற்றிடப் -- பொன்னினற் சிவிகையின் எழுந்து போயபின் தன்னிகர் முனிவரும் தமரும் சூழ்தர மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுரு. (4)