பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5500 கம்பன் கலை நிலை -மண்ணு ர்ேக்கு வரம்பு கண்டால் அன்றிக் கண்ணின் நீர்க்கு ஒர்கரை எங்கும் காண்கிலான். புனிதமான புண்ணிய தீர்த்தங்களால் இனிது 母六 구அரியனை அமர்ந்த இராமன் மணிமகுடம் குடி விளங்குவதைத் தன் கண்களால் நேரே கண்டபோத தான் அழுகை நீங்கிப் பரதனுக்கு ஆனந்தம் ஒங்கும் என்பது ஈங்கு அறிய கின்றது. கம்பியின் கிலைமையும் நீர்மையும் தமையனுடைய தலைமை ர்ேமைகளை நலமாக் காண அவாவியே கருதி உருகி யுள்ளன; அவ்வுண்மையை ஈண்டு எண்மையா அறிந்து கொள்கிருேம். மண்ணுதல் = கழுவுதல். அஞ்சன மேனியான் மஞ்சன நீராடி மணிமுடி புனைவதை இனிது காணவே பரதனுடைய கண்களும் நெஞ்சமும் கருதி உருகி ம.முகி கிற்கினறன. பரிவின் தன்மை உருவு கொண்டதுபோல் எவ்வழியும் அண்ணனையே எண்ணிக் கண்ணிர் சோர கின்ற பரதன் கால அளவுகளைக் கருதி ஆராய விரைந்தான். கானகம் போன மான வன் மீண்டு வருவதாக உறுதி கூறிய ஆண்டுகளே முதலிலிருந்து முறையே எண்ணி நோக்கினன். கணிதக் கலைகளில் தலைசிறந் துள்ள சோதிடர்களே அழைத்து வரும்படி பணித்தான். கணித நிபுணர்கள் யாவரும் வந்து வணங்கி கின்றனர். அவரை உரிமை այւ-65r உபசரித் து அருகே அமாச் செப்தான். பிரியம் மீதுார்க்க எல்லாரும் மரியாதையுடன் மருங்கே இனமா மருவியிருந்தனர். கணிதர் கணித்தது. அன்பு கனிந்து ஆதரவுடன் வந்திருந்த சோதிடர்களை நோக்கிப் பரதன் இனிது வினவினன்: 'அரசுமுடி துறந்த எம் பெருமான் வனம் நோக்கிப் போன நாள் தங்கள் நினைவில் இருக்கிறதா? இருந்தால் அன்று முதல் இன்றுவரை யுள்ள கால அளவைக் கணித்துச் சொல்லுங்கள்’ என்.று கருதிக் கேட் டான். கேட்கவே கணிகர் எண்ணி ஆராய்ந்தார். கண்ட முடிவை நேரே தெரியக் கூறினர். 'அரசர் பெரும! அண்ணல் சென்ற நாள் தொடங்கி இன்று முடியப் பதினன்கு ஆண்டு கள் ஆகின்றன” என்று அந்தக் கணிதர் துணிவாய்ச் சொல்லி ஞர். கால நிலையைக் கூர்ந்து ஒர்ந்தே அவர் தேர்ந்து உரைத்தார்.