பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5574 கம்பன் கலை நிலை A God all mercy, were a god unjust. (young) எல்லாரிடமும் கருணை காட்டினல் அந்தக் கடவுள் அநீதி யுடையதாம் என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது. டகரும நீதிகளோடு தழுவியே இராமனுடைய கருமங்கள் யாண்டும் நிகழ்ந்து வருகின்றன. இக்கோமகன் வில்லும் விர மும் சொல்லும் செயலும் எவ்வழியும் அல்லவைகளை நீக்கி நல்ல வைகளையே ஆக்கி வருவதைத் தேவர் முதல் யாவரும் நோக்கி அரிய பெரிய அதிசயங்களை ஆற்றி உலகம் துதிசெய்த தொழுது புகழ விழுமிய வெற்றியோடு வ க் து ள் ள அந்த அனகனைக் கண்டு மகிழத் தேச மக்கள் எல்லாரும் ஆசை மீதுளர்ந்து திரண்டு எழுத்து தென் திசையை நோக்கி கடந்து வந்தனர். மாந்தர் முன்னே செல்ல வேந்தன் பின்னே வந்தான். திருவடி இரண்டுமே செம்பொன் மெளலி. பரதன் வந்துள்ள கோலத்தை இது வரைந்து காட்டியுள் ளது. இராமனுடைய திருவடி தோப்ந்த பாதுகைகளைத் தன் ఆడిడాuతు வைத்தக் கொண்டு இக் குலமகன் வந்தது அக் கலை மகன் பால் பூண்டுள்ள நீண்ட அன்பின் நிலைமையை நேரே விளக்கி கின்றது. பத்திப் பரவசம் பார் அறிய கேர்த்தது. மரத்தால் செய்துள்ள அந்த மிதியடிகளே அரிய மணி மகுடமாக் கருதி உரிமையோடு போற்றி வந்துள்ளான். அந்த உண்மை செம்பொன்மெளலி என்ற தல்ை நன்கு தெரிய வந்தது. இராமனது திருவுருவையே கருதி உருகி வருகிற பரதன் அவனுடைய மிதியடியைத் தலையில் தாங்கி உவகையில் ஒங்கி வந்தான். அனுமானுடைய இடது கையைத் தனது வலக்கரத் தில் பிடித்துக் கொண்டே வழி நடந்தான். சேனைகள் யாவும் சிங்தை களித்து முந்து ற நடந்து போக இந்த இருவரும் பல வகையான உரைகளை நலமாப் பேசி வந்தனர். தென்திசை நோக்கிச் சிறிது தாரம் வரவே பொழுதும் அடைந்தது. எல்லவன் மறைந்தனன் என்னை ஆளுடை வில்லியை எதிர்கொளப் பரதன் மீச்செல்வான் அல்லியங் கமலமே அனேய தாள்களில் கல்லதர் சுடும்தன கதிரின் என்னவே,