பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5575 இராமபிரான எதிர் கொண்டு காண முதிர் போன் போடு பரதன் வருகிருன்; அவனுடைய மெல்லிய பாதங்கள் அல்லி யங் கமலங்கள் அனேயன; சுடு வெயில் படின் அவை வருக்தும்; அவ்வாறு வருக்காமல் சுகமாய் எளிதே கடந்து போக வேண்டும் என்று கருதிச் சூரியன் விரைந்து மறைந்து போயினன் என வரைந்த கூறி யுள்ள இது ஈண்டு வியக்க நயங்க காண வந்தது. பகல் கழிவதும், இரவு வருவதும் இயல்பான நிகழ்வுகள்; காலம் சுழன்று வருகிற அந்த நிலையைக் கவி இந்தவாறு சரித நிகழ்ச்சியோடு கலந்து சுவையா விளக்கியிருக்கிருர் என்னை ஆளுடை வில்லி என இராமனை இவ்வளவு உரி மையோடு சொல்லியுள்ளமையால் அந்தப் பெருமானிடம் இக் தக் கவிஞர்பிரான் கொண்டுள்ள பேரன்பு கிலையை ஒரளவு நாம் உணர்ந்து கொள்ளுகிருேம். உரிய ஆண்டவனிடம் பெரிய பிரியம் நீண்டுள்ளது; அந்த அன்புகிலே பண்பு சுரங்து திகழ்கிறது. உள்ளத்தில் உறைந்துள்ள அன்பு உரையில் விரைந்து தள்ளி வருகிறது. காம் கருதிய கருத்துக்களையும் கற்பனைகளையும் காவி யங்களில் ஒவிய உருவங்களாக் கவிஞர் வெளியாக்கி வருவது உணர்வின் காட்சிகளா எவ்வழியும் ஒளிமிகுக் து வருகின்றது. எல்லவன் = சூரியன். ஒளிசெய்து வருபவன் என்னும் பொருளையுடைய பேரை ஈண்டு வெளிசெப்தருளினர். பரதன் குரிய குலத்தோன்றல் ஆதலால் அவன் இனிதே வழி நடந்து செல்ல இவன் அளி புரிந்துள்ளான். தன் கருக்கைக் காரணத் தோடு பூரணமாச் சூரியன் மேல் ஏற்றிச் சொல்லியிருத்தலால் ஏதுத்தற்குறிப்பு அணி என்னும் அலங்கார மாப் இது இங்கே தலங்கி நின்றது. சொல்லும் பொருளும் நல்ல ஒளிகளுடையன. சிறந்த கலை அறிவு உயர்ந்த நிலையில் சுவை சுரந்து வந்துள் ளது. காவியக் காட்சி சீவியங்களை விளக்கி வருவத வியப்புகளை விளைத்து வருகிறது. உணர்ச்சி நலங்கள் மனித சமுதாயத்துக்கு உயர்ச்சி தருவகால் அவற்றைக் கவிகள் உரிமையோடு உரைத் தருளுகின்றனர். நல்ல கிலைகளை ஈயமாச் சொல்லி விடுகின்ருர். Poetry is the utterance of deep and heart-felt truth. (Chapin)