பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5582 கம்பன் கலை நிலை அமரர் குடிவாழ்வை உயர்த்தி வந்துள்ளமையால் இவ் வீர வள் ளலுக்கு அவ் வானவர் கோன் உள்ளம் உவக்க கையுறையாக் கதிர்மணியைக் கொண்டு வந்தான். சிவந்த கிரணங்களை எங்கும் விசித் திவ்விய சோதியாய்ச்சிறந்து விளங்கினமையால் சிகாமணி என வந்த க. அரசர் பெருமான் கலையில் சூடுகிற முடிக்கு முடிமணியாப் கின்றது. விலையிடலரியது; நிலையில் உயர்ந்தது; உலகிற்கு ஒளி புரிவது என்னும் பொருள் பல பொருக்தியுளது. இரவி குல திலகனுக்கு இரவியே சிரோமனியாப் எழில் புரிந்து ஒளி விரிங் க.க. குலத்தாலும் குணத்தாலும் அறிவாலும் ஆற்றலாலும் ஆட்சியாலும் மாட்சியாலும் இராமன் வான ஒளி போல் வயங்கி வருகிருன் , அந்த வரவு கிலே ஈண்டு வரமாய் உணர வந்தது. கரும வீரனிடம் தரும நீதிகள் பெருகி வந்துள்ள மையால் தேவதைகளும் இவன் பால் ஆவலோடு ஆதரவு புரிந்து வருகின்றன. அதிசய வீரனே யாவரும் ததி செப்த கின்றனர். இராவணன் வேட்டம் போய் மீண்டு அயோத்தி எய்தி வனவாசம் போய் மீண்டு வந்துள்ள இராமனை ஈண்டு இவ்வாறு நாம் அறிந்து கொள்ளுகிருேம். கானகம் போய்த் திரும்பி வந்தவனே இன்னவாறு கவி காட்டி யிருப்பது உன்னி யுனா வுரியது போனதும் வந்ததும் புதுமை கோய்ந்துள்ளன. மன்னர் மன்னவனுய் இராமன் மன்னியிருக்க நேர்ந்த போது கூனி இன்னலாப்க் கோள் மூட்டி இடர் நீட்டினள். இராமன் முடி இழக்கு காட்டுக்குப் போக மூண்டது இராவ ணன் குடி மடிந்து அடியோடு அழிந்த போகவே நீண்டது. -இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல் துன்னருங் கொடுமனக் கூனி தோன்றிள்ை. (மந்தரை, 59) இராமன் அயோத்தியில் அரசனுப்த் தோன்றியிராக படி கூனி கொடுஞ் சூழ்ச்சியாய்த் தோன்றியது இராவணன் குலத் தோடு அழிந்து ஒழியவே என்பதை இது தெளிந்து கொள்ளச் செப்த து. ஒரு கிழவி செயல் பல கோடி கிரு கரை அழித்துளது. இங்கப் பொல்லாத கூனியின் புலே மொழியைக் கேட்டு நல்ல கைகேசியும் உள்ளம் திரிந்து அல்லல் செய்ய சேர்ந்தாள்.