பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 107.1

வடித்த மாதவ கேட்டிஇவ் வள்ளல்தான்

இடித்த வெங்குரல் தாடகை யாக்கையும்,

அடுத்தென் வேள்வியும், கின்அன்னே சாபமும்,

முடித்துஎன் கெஞ்சத்து இடர்முடித் தான் என்றான்.

முனிவர் இப்படிச் சொல்லி முடிக்கிருக்கிரு.ர். முடிக்கல் என்னும் ஒரு வினைச் சொல் பலவகை வினேகளில் படிந்து இதில் முடிந்துள்ளது. யாக்கையை அழித்து, வேள்வியைகிறைவேற்றி, சாபத்தை ஒழித்து, இடரை நீக்கி இகம்புரிந்துள்ள கிடவிான் என்பதாம்.

அழித்தல், காக்கல், ஒழித்தல், நீக்கல் என்னும் பல வினே களையும் முடித்தல் என ஒரு வினேயால் முடித்தது, யாரும் முடிக்க முடியாக அரிய காரியங்களையெல்லாம் ஒருங்கே உல்லாச வினேக மாய் இவன் தனியே முடித்தருளினுன் என்ற முடிபுனா வங்கது.

கின் அன்னை என்றது அகலிகையை. கல்லாய் இழிந்து கிடந்த உன் காயைப் பழையபடி தாயவளாக எழுப்பி உனது தங்கையிடம் சேர்த்து வந்துள்ளான் என்னும் இக்க வார்க்கை யைக் கேட்ட பொழுது சகானக்கர் சிங்கை எப்படி இருந்திருக்

கும் ? காரிய முடிவுகளைச் சீரிய முறையில் செப்பி யிருக்கிரு.ர்.

கசாதச் சக்கரவர்த்தியினுடைய அருமைத் திருமகன் என ஒரே சொல்லில் பெருமையாக அறிமுகம் செய்யாமல் இவ்வாறு செயல் வகைகளைச் சுட்டிக் கூறியது அவனது இயல்பான உயர்

கிலையை உய்த்து உணர்ந்து உவந்து கொள்ள என்க.

அரச கிருவில் சிறந்திருந்தாலும் சில குமார்கள் ஒரு நல லும் ஆற்றாமல் உருப்படி யளவில் ஒருப்பட்டிருப்பர் ஆதலால், அக்கொலுப் பொம்மைகளுள் ஒன்றாக இக்கொற்றக் குரிசிலைக் கருதிவிடலாகாது என் து உறுதி குழ்ந்து உரைத்திருக்கிரு.ர்.

தாடகையை முடிக்கது என்றது. ஆடவர் எவரும் வியந்து போற்றும் அரிய பெரிய வீசச் செயல் தெரியவந்தது. வேள்வி காத்தது, கரும பரிபாலனன் என்பதை விளக்கி கின்றது. சாபம் ஒழித்தது, தெய்வக்கன்மையைத் தெளிவித்தது. மாதவர் இடர் நீக்கியது, சாது சனங்களுக்கெல்லாம் தாயகம் என்பதைப்

புலனுக்கியது. ஆகவே இவனது அற்புத கலங்கள் தெளிவாயின.