பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1078 கம்பன் கலை நிலை

மின் உரு பெண் உருவாகி யுள்ளது என இவற்றுள்ளும் வந்துள்ளமை காண்க. விண்ணின் நீங்கிய என்றது கண் எ திாே

மண்ணின் ஒங்கியுள்ள அப்பெண் ஒளியின் மகிமையை எண்ணி.

இம்முறை =இப்படி. ஈ.த அலது ஒன்று அறியேன் என்றது இக்கப்பெண்ணுருவைக் கவிர வேறு ஒன்றையும் நான் அறிந் கிலேன் என்றவாறு. விழித்து நோக்கினல் எ கிரே தோன்றுெ ன்றது; கண்ணே முடினல் உள்ளே தெரிகின்றது; என்னே இது! என எண்ணி மயங்கின்ை.

‘ இரு கண்ணின் உள்ளும் கருத்துள்ளும் காண்பெனல்

என்றமையால் சீதையின் உருவெளிக் கோற்றம் ‘புறத்தும் அகத்தும் ஒருங்கே பொலித்து கின்றுள்ளமை புலம்ை.

இங்கனம் எண்ணினவன் பின்பு கண்னழகை வியந்து உண் னெகிழ்ந்து வண்ணங்லையை வனேந்து புகழ்ந்துள்ளான்.

வள்ளற் சேக்கைக் கரியவன் வைகுறும் வெள்ளப் பாற்கடல் போல்மிளிர் கண்ணினுள் அள்ள ற் பூமகள் ஆகுங் கொலோ ? எனது உள்ளத் தாமரை உள்ளுறை கின்றதே.

(மிதிலைக் காட்சி, 141)

சானகியின் கண்ணேக் குறித்து வங்கிருக்கும் இவ்வருணனை எண்ணி யுனருங் தோறும் இன்பம் கருகின்றது.

கிருமால் பள்ளிகொண்டுள்ள வெள்ளிய பாற்கடல் ஒள்ளிய கண்களுக்கு இங்கே உவமையாய் வநதது. வள்ள ற் சேக்கை என்றது அரவணையை. நீல நிறமுடையவன் ஆதலால் திரு

மாலைக் கரியவன் என்றார் உரியவன் கூறிய உரையிது.

விரிந்து பாக்க வெண்கடல் வெள்ளை விழிக்கும், அக்கடலி டையே வட்ட வடிவமாய் அமைந்துள்ள பாம்புப் படுக்கை கரு விழிக்கும், அவ்வனே நடுவே எழுக்கருளி யிருக்கும் திருமால் கருவிழியிடை மிளிரும் ஒளி மணிக்கும் உவமையாம்.

இங்கக் காட்சி கருத்துான்றிக் காணத்தக்கது. வெண்மை யும் கருமையும் ஒளியும் மருவி யுள்ளமையான் கண் டாற்கடற்

பள்ளியாைேடு இவ்வண்ணம் புனைந்து பாராட்டப்பெற்றது.