பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1088 கம்பன் கலை நிலை

காமவேட்கையை விளைக்கலால் காமன் , மனத்துள் மகக் களிப்பை மூட்டலால் மன்மதன் என்க. இன்ன வண்னம் காானப்பெயர்கள் பல மாானுக்கு இருக்கின்றன.

உயிர்களுக்கு இயல்பாயுள்ள காம இச்சையை உருவகப் படுக்கி அதற்கு ஒரு அகி கே வகையை அமைத்துக் காம தேவன் எனப் பேரிட்டு வில் அம்புகள் இணேத்துப் படை பரி வாங்கள் விரித்து விாப்பாடு தோன்ற வியந்து பாராட்டி வருவது நூல் வழக்கமாய் மிகவும் பெருகியுள்ளது.

காம கிலையமான இனிய பொருள்கள் யாவும் அவனுக்கு உரிமைகள் ஆயின. அவனுடைய தேர், கென்றல் யானே, இருள்; குதிாை, கிளி ; சேனை, இளம்பெண்கள் ; வில், கரும்பு : நாண், வண்டு ; அம்பு, மலர் உடைவாள், காழம்பூ காளம், குயில் ; குடை, சக்திான் ; கொடி, மீன் முரசம், கடல் என்க.

குறித்த பொருள்கள் காமம் கனிவிக்கும் இயல்பின ஆக லின் காமனுக்குச் சேமங்களாயின. இந்த மெல்லிய படைகளை யுடைய இவன் உலக முழுவதையும் எளிதே வெல்லுகின்றானே என்பது வியப்பு.

கரும்பும் சுரும்பும் அரும்பும் பொரும்படைக் காமர்வில்வேள் இரும்பும் கரைத்துரு கச்செய்யு மால் இறும் பூதிதன்றே விரும்பும் பெரும்புலி யூரெம்பி ரானருள் மேவிலொரு துரும்பும் படைத்தழிக் கும்மகி லாண்டத் தொகுதியையே.

(சிதம்பாச் செய்யுட் கோவை, 74)

காமனது அதிசய ஆற்றலை விளக்கிக் கில்லைப் பாமனைத் அதிசெய்த படியிது. இறும்பூது = வியப்பு. பெரும்புலியூர்= சிதம்பாம். இரும்பும் கிாைங்து உருகும் என்றது அவனது அருங்கிறல் கிலை அறியவந்தது. எவ்வளவு வைாக்கிய முடைய நெஞ்சமும் காமவேட்கையால் உலைமெழுகுபோல் உருகி கிலை குலையும் என்பதாம். ஆகவே அவனது அடலாண்மையைப் புகழ்ந்து பெருந்தவசிகளும் வியந்து போற்ற நேர்ந்தது.

பைங்தொடியார் ஆசைநோய் கெம்பீர மனிதரையும் ப துமம் தன்னே முந்திரவிக் கதிர்போல மிளிர்விக்கும்

கனலிடியும் முனேக்கூர் வாளும்