பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1115

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கைநோக்கிக் கடல்நிறக் கடவுள் எங்தை அரவணைத் துயிலு மாகண்டு உடலெனக் குருகு மாலோ என்செய்கேன் உலகத்திரே !

(திருமாலே, 19)

வைகுண்டநாதன் திருவயோத்தியைவிட்டு, கிருவாங்கத்தில் வந்து எழுந்தருளி அாங்கநாதனுய் அமர்ந்து இலங்கையை நோக்கி வீடணனுக்குக் காட்சி தந்து நாடறிந்து நலமுற நன்கு பள்ளி கொண்டிருக்கின்றான் என இவை குறித்துள்ளன காண்க.

க குத் தன்

இவன் இக்குவாகுவின் நான்காவது வழிமுறையில் வந்தவன். அவனுடைய மகனுகிய சசாதனுக்குப் போன். புரஞ்சயன் என் லும் அரசனுடைய அருமைக் கிருமகன். அருங்கிற லாண்மை யும் பெருந் தகைமையும் கிறைந்தவன். சிறந்த போர் வீரன். இவன் அயோத்தியிலிருந்து அரசுபுரிந்து வருங்கால் ஒரு முறை வானவருக்கும் கானவருக்கும் பெரும்போர் மூண்டது. அதில் அமாரை அசுரர் வென்று தொலைத்தார். அமார் கோளுகிய இக் திரன் யாதும் செய்ய முடியாமல் மனம் மிகவுடைந்து மறுகி நின்றான். அரசினை இழந்து பரிதபித்திருந்த அவன் முடிவில் இவனிடம் வந்து குறையிாந்து வேண்டினன். இவ்விர மகன் உடனே வில் எடுத்து விாைந்து சென்று அமராவதியில் குடி புகுந்துள்ள அசாரெல்லாரையும் அடங்க வென்றான். இவனது விாநிலையைக் கண்டு இந்திான் வியந்து புகழ்ந்து கன் கோளில் சுமந்து துதித்துப் போற்றினன். சிவனைத் தாங்கும் இடபம் போல இவனைத் தாங்கித் தனது நன்றி பாாாட்டுதலை அவன் அங்ஙனம் வெளிப்படுத்தினன். அவனுக்குப் பொன்னுலகை உதவி இன்னருள் புரிந்துவிட்டு இவன் தன்னிடம் வந்து சேர்க் தான்.

என்று எடுத்த சிலையினனுய் இகல்புரிந்த இவர் குலத்தோர் தோன்றலைப் பண்டு இந்திரன்காண் விடைஏருய்ச் சுமங்தான்.”

என அந்த விாப்பாட்டையும் வெற்றித் திறத்தையும் இங் நனம் குறித்துக் கூறினர். பெரும்புகழ்க் குரிசிலான அம்மன் னன் மகிமை தெரிய இராமனும் காகுத்தன் என கின்றான். ககுத்தன் மரபில் வந்தவன் என்பது அப்பெயர்க்குப் பொருளாம்.