பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1140 கம்பன் கலை நிலை

புவிமகளேயும் பூமகளையும் இனே க்துக் கூறியது இம் மாமக ளின் மகிமை அறிய. இங்கனம் கோன்றிய இக்குலமகளுடைய குணநலங்களையும் எழில் கிலைகளையும் இனி எடுத்துக்கூறுகின் ருர், குணங்களே என் கூறுவது ? கொம்பினச்சேர்ந் தவையுய்யப் பிணங்குவன : அழகு இவளேத் தவம்செய்து பெற்றது.காண்! கணங்குழையாள் எழுங்ததற்பின் கதிர்வானிற் கங்கைஎனும் அணங்கிழியப் பொலிவிழந்த ஆருெத்தார் வேறுற்றார். 18

t_ஒரு நல்ல குலமகனுக்குப் பெண் தேடி வங்கவர், அம்மன மகளின் குணநலங்களையும் அழகையும் குறித்து ஆர்வக்கோடு முதலில் விசாரிப்பது வழக்கம்; அந்த முறையில் வங்கிருக்கும் விசுவாமித்திாரிடம் பெண்ணின் சார்பாகச் சதானந்தர் இவ் வண்ணம் பேசியுள்ளார்.

சீதையின் குணங்கள் எப்படி ? என்று மாதவர் கேட்க அதற்குப் பதில் கூறியதுபோல் மொழிகள் வந்திருக்கின்றன.

குனங்களை என் கூறுவது? என்று கூறியிருக்கும் கூர்மையை கோக்குக. உரையிடலரிய பெருர்ேமையள் என்பதாம்.

‘உயர்ந்த பெண்மைக் குணங்களெல்லாம் இப்பெண்ணாசி யிடம் ஒருங்கே கிறைந்து உவந்து குடிகொண்டிருக்கின்றன என் பார், கொம்பினைச் சேர்ந்து அவை உய்யப் பினங்குவன ’’ என்றார், ! பிணக்கம் இனக்கக்கின் ஆவலை உணர்த்தி கின்றது.

அன்பு அடக்கம் அருள் அமைதி கிறை பொறை முதலிய இனிய சீர்மைகள் யாவும் இப்புனிதவதியைச் சார்ந்திருப்பதில் முக்கி, கான் முக்தி என ஒன்றினும் ஒன்று விாைந்துபோராடி Hலக்கு வந்து புகுந்து கலந்து மகிழ்ந்திருக்கின்றன என்றவாறு.

அழகு எப்படி ? என்று வினவ அது இவளைத் தவம் செய்து பெற்றது காண்! என்றார். உரைகளில் மிளிர்கின்ற உணர்வின் இாசனைகள் உணருக்கோமம் உவகை யருள் கின்றன.

மக்களின் புண்ணியப் பேறு என யாண்டும் புகழ் மிகப் பெற்றுக் கண்ணியம் வாய்ந்துள்ள அழகும் அரிய பெரிய புண்ணி யங்களைச் செய்து இப்பெண்ணாசியை கண்ணியுள்ளது என்பதாம்.

அமுதுக்குச் சுவைபோல் அழகுக்கு அழகு அருளும் அதி சய அழகினள் என உருவ நிலையைத் துதிசெய்த படியிது.