பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1262 கம்பன் கலை நிலை

உயிர் கனியே கின்றால் அஃது அருவமாய்க் கண்ணுக்குக் கெரியாது. உடலை மருவியபொழுதுதான் உருவகிலை அடைந்து உயிர் அரிய செயல்கள் புரியும். இாமன் பிாமச்சாரியாய்க் தனியே இருந்தால், உலகிற்கு இனிய பயன் இன்றி வறிகே போயிருப்பன் ; சனைெய மணந்துகொண்டமையினலேதான் உலகமெல்லாம் உயர்ந்த பயன் அடையும்படி அவன் சிறந்து விளங்கினன். எழில் உருவம்போல் பருவ மங்கையும் தொழில் புரிய அமைக்கது.

உயிர் உடம்பு என்ற உவமக்குறிப்பால் பொருள்களினு டைய உயர்வும் இயல்பும் உறவும் உரிமையும் உனாலாகும்.

உயிர் பெற்ற உடல்போல் இராமனைப் பெற்றுச் சீதை ஒளி பெற்று கின்றாள். அழகிய உடலமைக்க விழுமிய உயிர்போல் மணமகனை இக்குலமகன் உலகம் மகிழ்வுற ஒளிசெய்து கிலவி ஞன். இந்த இணைப்பு யாண்டும் இன்பக் காட்சியாய் இனிமை சாந்து மன்பதை மாட்சிபெற மருவிவந்துள்ளது.

E. --

5. மங்கல அங்கியை வலஞ் சுற்றி வந்தவர் பின்பு அம்மி மிதித்து அருங்ககி கண்டார்.

பெண்ணின் பாதத்தைத் தாக்கி மாப்பிள்ளை அம்மியில் வைப் பதும், ஆகாயத்தே அமைந்துள்ள அருங்ககி என்னும் கட்சக்தி ாக்கைக் காட்டுவதும் பண்டை வழக்கங்களாய்ப் பாவியுள்ளன.

இவற்றிற்குக் கத்து வங்களும் விக்ககமாய்க் கூறிவருகின்றனர்.

அம்மியில் கால் வைப்பது. கற்புடைமையில் உன் கெஞ்சம் இங்கக் கல்லைப் போல் யாண்டும் கலங்காதிருக்க வேண்டும் ; அங் கனம் இருப்பின், மன்னுயியெல்லாம் கொழ அருந்த்தி என்னும் அக்க விண்மணி போல நீ விளங்கியிருப்பாய்! ‘ என்று பெண் அணுக்கு நாயகன் ஒர் புண்ணிய போகனே செய்வதாக எண்ணப் படுகின்றது. வழக்கங்கள் யாவும் கண்ணியம்கனிந்து வந்துள்ளன.

குளிர்மதி கொண்ட நாகம் கோள் விடுக் கின்ற தேபோல் தளிர் புாை கோதை மாதர் தாமரை முகத்தைச் சேர்ந்த ஒளிர்வளேக் கையைச் செல்வன் விடுத்தவள் இடக்கை பற்றி வளர் எரி வலங்கொண்டாய் பொற் கட்டில்தான் ஏறிேைன. (1)