பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ராமன் 1263

விளங்கொளி விசும்பிற் பூத்த அருந்ததி காட்டி ஆன்ட்ால் வளங்கொளப் பூத்த கோல மலரடி கழி இய பின்றை இளங்கதிர்க் கலத்தின் ஏந்த அயினிகண்டமர்ந்திருந்தான் துளங்கெயிற் றுழுவை தொல்சீர்த் தோகையோ டிருந்தது ஒத்தான். (2

(சீவக ra சீவகன் இலக்கணேயை மணந்த பொழுது நிகழ்ந்த சடங்கு முறைகளைக் குறித்தபடியிது. தளிர்க்கை பிடித்துத், தீயை வலங் கொண்டு, இலங்கொளி அம்மி மிதித்து, அருந்ததி கண்டார் என்பன இக் கவிகளோடு இணைத்து நோக்க வுரியன.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை யுடையவன் நாராயணன் நம்பி செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி அம்மி மிதிக்கக் களுக்கண்டேன் தோழி! கான்.

(நாச்சியார் திருமொழி, 6)

நாராயணன் வந்து தன்னை மணந்துகொண்டதாகக் களுக் கண்ட ஆண்டாள் அதனைத் தனது கோழியிடம் கூறியவாறிது. அம்மி மிதித்தல் இதில் குறித்திருத்தல் அறிக.

மனச் சடங்குகள் எல்லாம் இங்கனம் நன்கு கிறைவேறிய பின் தன் மனைவியுடன் வந்து இராமன் கோசிகரையும் தந்தையை யும் வணங்கி அதன்பின் வந்து காயரைத் தொழுதான். தொழுத முறை விநயமிக வுடையது. ஊகம் கிறைந்து உணர்வு நலம்

சுரந்து நேய உரிமைகள் கினைந்துகொள்ள வந்தன.

இராமன் தாயரைத் தொழுதது. கேகயன் மாமகள் கேழ்கிளர் பாதம் - தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி ஆயதன் அன்னே அடித்துணே குடித்

தூய சுமித்திரை தாள்தொழ லோடும். (1)

சீதை வணங்கியது. அன்னமும் அன்னவர் அம்பொன் மலர்த்தாள் சென்னி புனேந்தனள் : சிங்தை உவந்தார் கன்னி அருந்ததி காரிகை காண - கன்மக னுக்கிவள் கல்லணி என்றார், (2)