பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

932 கம்பன் கலை நிலை

ஈதலைப் புகழ்ந்து போற்றி, எற்றலை இகழ்ந்து தாற்றியது எவ்வழியும் இாவாது கின்ற இனிது முயன்று மானமும் வண்மை யும் உடையாய் மாங்கர் மருவி வரவேண்டும் என்றுகருகி என்க. கதையைக் கவினுற இழைத்து வருவதோடு உயிர்க்கு உறுதியான உயர் நலங்களையும் பயனுடன் விளைத்து நயனுற உணர்க்கி வரு ன்ெருர்,

திருமால் நெடுமால் ஆனது

சுக்கிான் எவ்வளவு தடுத்தும் யாதும் கேளாமல் வாமனர் வேண்டியபடியே மூன்றடி மண் அளந்துகொள்ளும்படி மாவலி தாரை வார்த்துக் கொடுத்தான். கொடுக்கவே அம்மாயக் கள் ளன் வானுற வளர்ந்து உலக முழுவதையும் ஒாடியால் அளந்து, மற்றாோடியை வானுலகில் நீட்டின்ை. இாண்டு அடிகளால் மண்ணையும் விண்ணையும் கவர்ந்துகொண்டு மீண்டும் மாவலியை நோக்கி, மூன்றடி மண் கருவதாய் வாக்களித்தாயே! இன்னும் ஒர் அடிக்கு இடம் எங்கே? மன்ன ! ‘ என்று புன்னகையுடன் கேட்டான். குள்ளர் செயலைக் கண்டு உள்ளம் அதிசயித்து நின்ற அவ்வள்ளல் தன் முடித் தலையை வணங்கி, உன் அடிக் தலத்தால் அளந்து கொள்க’ என அமைந்திருந்தான். அவ் வாறே மாயவன் திருவடியை மாவலி முடியில் வைத்துப் பாதலத் தில் அழுத்திப் பின்பு அவனுக்குப் பரமபதத்தை அளித்தான். கவர்ந்துகொண்ட உலகை இந்திரனுக்கு உரிமையுடன் கொடுத்து விட்டு மாயவன் மறைத்து போயின்ை.

திருமால் கொண்ட பத்து அவகாரங்களுள் இது ஐக்கா வது ஆகும். இந்த அவகாசம் கைப்பு உவப்பு வியப்பு விம்மி தங்களுடன் விளங்கியுள்ளது. இதனை ஆழ்வார்கள் பலரும் விழைந்து பாராட்டியுள்ளனர். -- *

மாலுக்கு, வையம் அளந்த மணுளற்கு ‘ (நம்மாழ்வார்) ஒரு குறளாய் இருகிலம்மூ வடிமண் வேண்டி

உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி, ஒன்றும் தருகஎன மாவலியைச் சிறையில் வைத்த

தாடாளன் தாள் அணைவீர். (திருமங்கையாழ்வார்) “ சிறியன் என்று என் இளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள்.’

(பெரியாழ்வார்)