பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1374, கம்பன் கலை நிலை

அங்கனன் அவனிகாத்தற் காமிவன் என்ன லாமோ கங்கண் அன்பிலன்என் றுள்ளம் தள்ளுற நடுங்கி கைவார் செங்கணும் கரிய கோல மேனியும் தேரு மாகி எங்கணும் தோன்றுகின்றார் எனேவரோ இராமன் என்பார்.

(கைகேசி சூழ்வினை. 80-86) சுமந்திான் வந்து சொன்ன உடனே இராமன் தேர்மேல் எழுந்தருளிக் கைகேசி மாளிகையை நோக்கி வந்தான் ; வருங் கால் விதிகளில் பலவகையான மங்கலப் பொருள்களை வாரிக் தாவி ஆர்வ மீதார்ந்து கண்டு யாவரும் இவ்வாறு ஆனந்தக் காட் சியாாய் கின்றார். அந்தக் காட்சி கிலைகள் அவனது திவ்விய் சவுத் தரிய மாட்சிகளைக் காட்டி இடங்கள் தோறும் நமக்கு மகிழ்ச்சி யூட்டி வருகின்றன. ‘ கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்துள்ளார் உன்னைப்

பெற்றவன் தன்னைப் போலப் பெரும் பரிவு இயற்றி நின்றார்: என்றது தான் முடி சூடுவதில் உலகம் கொண்டிருக்கும் உவகை நிலையை இளவரசுக்கு உளமகிழ உணர்த்திய வாரும்.

தங்கள் கங்தையாாைப் போலவே உலகத்தில் உள்ள எல் லாரும் உங்கள் பால் போன்பாளாாய்ப் பெருகி கிற்ன்ெருர் என இாாமனிடம் சுமத்திான் உாைத்திருக்கும் இந்த உாை அவனது உள்ளன்பையும் வெளிப்படுத்தியுள்ளது.

கொற்றவர் என்றது அரசர்களே. மன்னரை முன்னுறக் குறித்தது அவர் அன்புறுதல் அருமை ஆதலால் அதிசய நிலையில் அமைந்துள்ள அவாக உள்ளக்காதலை முதன்மையாகக் குறித்துக் காட்டி உவகையும் ஊக்கமும் ஒருங்கே ஊட்டினன்.

உலகப் பற்று அற்ற மாகவரும் உன்பால் பெரும் பற்று உடையாாய்ப் பெருகி யுள்ளனர் என்பதை முனிவர் என்ற இனிய மொழியால் விளக்கினன்.

குவலயத்து உள்ளார் என்றது. பூமியில் உள்ள அனைவரும் என்றவாறு. குவலயம்=பூமி. குடிசனங்கள் முதலாக உலகம் அடங்கலும் ஒருமுகமாகவே உரிமை மீதுார்ந்து எதிர் நோக்கி உள்ளமையை உணர்த்திய படியிது. பரிவு=உள்ள ம்உருகிய அன்பு. உங்கள் சிறிய தாயாரும் அவ்வாறே உருகிய நெஞ்சாய் உங்களைக் கம்பால் அழைத்துவ ச் சொல்லினர் என்பான்,