பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1425

மறுகி யுழல நேர்ந்தாய்! விதி கியமங்களை கினைந்து உறுதியுண்மை யை உணர்ந்து பொறுதியாய் இரு’ என இங்கனம் இராமன் இலக்குவனுக்கு அறிவுறுக்கின்ை.

இவ் வைய மையல் தோன்றா நெறி வாழ் துணைத் தம்பி

எனப் பாதனை இராமன் கினேந்து உருகி இருக்கும் கிலை உணர்ந்து சிந்திக்க வுரியது. வஞ்சனே சூது பொருமை பேராசை முதலிய ஈனங்கள் யாதும் இல்லாக ஞான சீலன் என அந்த அருமைக் தம்பியை எண்ணி எண்ணி இந்த அண்ணன் கரைந்துள்ளமைய்ால் உண்மை கிலையும் உணாவக்கது. துணைத்தம்பி என ஆர்வம் கனிந்து அணேத்திருக்கும் அன்புரிமைய்ை கினைத்து நோக்குக.

நெறி திறம்பாக அந்தப் புண்ணிய ாேனே என்னினும் இனி யனக் கருதி உன் அண்ணன் என உரிமை கூர்ந்து நீ போற்ற வேண்டியதை மறந்து இங்கனம் தாற்றலாமா? என்பது குறிப்பு.

சான்றாேர் புகழும் தவத் தாதை என்ற கல்ை தன் கங்தையை இம் மைந்தன் மகிக்கிருக்கும் மாட்சி புலம்ை. அவனைத் தங்தை யாகப் பெறுதற்கு நாம் என்ன தவம் செய்தோமோ? என்று

எண்ணி மகிழ்ந்திருக்கிருன்.

அவனது அருந்தவமே இவன் மகய்ைப் பிறந்து வருதற்குச் சிறந்த காாண மாய் விளைந்திருத்தலால் ‘தவத் தாதை’ என்றான். ஈன்றாள் எனக் கைகேசியை ஆன்ற அன்புரிமையுடன் போற்றி யிருக்கிருன். அக் கொடியவள் எவ்வளவு கேடு செய்திருக்கிருள்: அப்படி யிருந்தும் இப்படி உள்ளம் கனிந்து பேசி யிருக்கிருனே! இவனது இதயப் பான்மை அதிசய கிலேயில் தனியமைந்துள்ளது. வெம்பிக் கொதித்த தம்பிக்கு இக் கம்பி இவ்வாறு அன்புரி மையுடன் அறிவுரை பகர்ந்து ஆற்றி யருளினன்.

ஆற்றவே இளையவன் சீற்றம் சிறிது கணித்தது. கணியினும் மனத்துயரமும் சினமும் உள்ளே கனன்று கொண்டிருந்தன தன் மனம் போல வேலை செய்யவிடாமல் அண்ணன் அடக்கி கிற்றலை கினைந்து கினைந்து நெஞ்சம் புழுங்கினன். எதிர் பேச முடியாமல் முதிர் கோபம் அடங்கி மதி மயங்கி மனம் உயங்கித் தனியே தியங்கிக் கவித்து மறுகினன்.

179