பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. * இ ரா ம ன் 1637

வாரணம் அரற்றல் ஒய்ந்து வானுறத் தடக்கை நீட்டிப் பூரண உலக மெல்லாம் பூத்து அளித்து அழித்து கின்ற காரண ! பரமானந்தக் கடலிடைக் குளிப்போர் நெஞ்சும் ஆரண் முடிவும் மேய அமலவோ ! என்று அரற்றும். (1)

r கூப்பிடு குரல்கேட்டு ஒடிக் கொழுமணிச் சுடிகை கெற்றிப் பாப்பணை அகற்றி வெய்ய படர்சிறைக் கலுமுன் ஊர்ந்து திப் பொழிந்து இலங்கு கூர்வாய்த் திகிரிகைத் தாங்கி யாவும் காப்பவன் பிறைவெண் கோட்டுக் களிற்றுமுன் எய்துற்றால்ை.

எறிசுடர் விரிக்கு நேமி எறிந்தனன் எறிதலோடும் பிறைபுரை எயிற்றுப் பேழ்வாய் பிளந்து வெவ்விடங்கர் துஞ்சி அறைதரு சாபம் தன்னல் அடைந்த அவ்வுருவு நீத்து விறலுடை யூசு என்னும் விஞ்சையன் ஆயிற்றன்றே. (3)

விழுமிய இசைநூல் தேர்ந்த விஞ்சையன் ஆய அன்னேன். பழமறை முதலி பாதம் பழிச்சினன் பதியிற் போயான் அழிவறு தவத்தின் மிக்க அகத்தியன் சாபம் தீர்ந்து மழைமதக் களிறு மாயன் வரம்பில் வீடு உற்றதம்மா.

(பாகவதம், 8-2)

மீனமர் பொய்கை நாள் மலர் கொய்வான் வேட்கையிைேடு சென்றிழிந்த கானமர் வேழம் கையெடுத்தலறக்

கரா அதன் காலினேக் கதுவ ஆனையின் துயரம் திரப்புள் ஊர்ந்து

சென்று கின்று ஆழி தொட்டானே தேனமர் சோலை மாடமாமயிலேத்

திருவல்லிக்கேணிக் கண்டேனே.

(பெரிய திருமொழி, 2-3)

ஆதித் தனிக்கோலம் ஆன்ை அடியவற்காச் சோதித் திருத்தோணில் தோன்றின்ை-வேதத்தின் முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப என் என்றான் எங்கட்கு இறை. ‘ (நள வெண்பா)

வாாணம் அழைப்ப காணன் வந்து காக்க கருணைக் திறத்தை இன்னவாறு பல நூல்களும் விழைந்த கூறியுள்ளன.