பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1768 கம்பன் கலை நிலை தங்கை; உன் பெருமையையும் அருமையையும் கருதி நோக்கி நான் மறுகுகினறேன். உன் மேன்மையும் என் காழ்மையும் மலையும் அணுவும் போல் கிலை பிறழ்ந்துள்ளன. உனது தலைமைக் கும் நிலைமைக்கும் தகுதியான வனே நாடிக் கொள்க; நான் உனக்கு எவ்வகையிலும் தகுதி அல்லன் என்னே நீ விழைவது உன் குலத் துக்கே குறைசெய்க படியாம். குடி இருக்க ஒரு வீடும் இல்லாமல் வனவேடனுய்க் காட்டுவாழ்க்கை வாழ்கின்ற நான் குபேர சம்பத் துடைய உன்னே எப்படி வைக் த வாழ்வேன்? என் கிலைமையை ஒரு சிறிது உணரினும் பின்பு நீ என்னே வெறுத்து விடுவாய்; மேலெழுந்தபடியாய் என்மேல் நீ காதல் செய்வது முடிவில் நோகலேயாம்; ஆதலால் இப்பொழுதே விலகி விடுவது நல்லது. உன் நன்மையை நாடிச் சொல்கின்றேன்; உண்மையை உணர்ந்து ஒதுங்கிப் போ” என இங்ானம் இதமொழிகளைப் பதமாக இனிது புகன் ருன். மதிநலம் கூறியும் அவள யாதும் அகலாமல மதம் மீறி நின்ருள். பின்பு மாறு ஒன்று கூறினன். 'நான் என்ன சொன்னலும் கேட்க வில்லை; என்னையே மணந்து கொள்ள வேண்டும் என்று மன்ருடுகின்ருய்; அப்படி யாயின், உன் அண்ணன் மார் இருவரும் இங்கே கேரே வந்து உன்னைக் கன்னிகாதானமாக என் கையில் தருவாராயின் ஏற்றுக் கொள்ளுகின்றேன். ' என இசைவதை எடுத்துக் காட்டினன். 'அன்னர் தருவாேல் கோடும்' என்றது அவரை உடனே போய் அழைத்து வா என். குறிப்பிக்கபடியாம். எப்படியாவது அவளே அந்த இடத்தை விடடு ஒட்டி விட வேண்டும் என்று உள்ளம் ஊக்கியுள்ளது. இராவணனை முதலில் குறித்தது அவளோடு உடன் பிறந்துள்ள உரிமையும், உத்தண்ட கிலேமையும் கருதி. ஒருவர் மட்டும் இசைந்தால் போதாது; இருவர் சம்மதமும் வேண்டும் என்பதாம். கோடும்=கொள்ளுவோம். மணம் செய்து கொள வோம் என அவள் கினேந்து கொள்ளும்படி வந்தது. கொள்வேன் என ஒருமையில் கூருது பன்மையில் குறித் தது, பெரிய இடத்துச் சம்பந்தம் ஆதலால் அதற்கு இசைய மாப்பிள்ளை மிடுக்கில் வார்த்தையும் விளைந்தது. இலக்கண மர பில் பேசி வருதலால் கலத்திறத்தின் ஒளி செழித்து வருகின்றது.